பக்கம் எண் :

மனோன்மணீயம்
3

45.உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ.
தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முனவாத வூரர் மொழிந்தனர். அன்றியுந்
தரணியே பசுவெனச் சாற்றலு மற்றதிற்
பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல்,
50.பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது
மேல்விளம் பாதே விளங்கும். ஒருகா
லெல்லா மாகிய கண்ணுத லிறைவனும்
பல்லா யிரத்த தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரை துலையின்
 55.ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையே பெரிது?
சந்நு செவிவழித் தந்த கங்கையும்,
60.பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்,
வருந்திய தேவரோ டருந்தவ்ா வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
6..சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயி னடம்பயில்
வளம் பொழில் கடந்து குளம்பல நிரப்பி,
யிருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
70.பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும்,
எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநந் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் பொலிவுறல் கண்டனை.
தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்
75.கலக்கத் தெல்லையுங் கட்செவிச் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுகம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே ! அதன்புறம்