| | நாட்டிய பதாகையிற் றீட்டிய மீனம், |
| 80. | உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும். |
| | வெயில்வரி யெயிலினங் காக்க வியற்றிய |
| | எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும் |
| | பொறிகளும் வெறிகொளுங் கிறிகளு |
| | [மெண்ணில. - |
| | |
| சுந்தர, (எழுந்து) | | சம்போ ! சங்கா ! அம்பிகா பதேஎ ! |
| 85. | நன்று மன்னவ ! உன்றன் றொல்குலங் |
| | காக்கநீ யாக்கிய இவையெலாங் கண்டுளேம். |
| | அல்லா துறதி யுளதோ? சொல்லுதி ! |
| | |
| ஜீவ, | | என்னை ! என்னை ! எமக்கருள் குரவ ! |
| | இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர் |
| 90. | வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகைக் |
| | கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ? |
| | ஆயினு மரணி லுளபுரை நோக்கி |
| | நீயினி யியம்பிடி னீக்குவ னொடியே. |
| | |
| சுந்தர, | | கால மென்பது கறங்குபோற் சுழன்று |
| 95. | மேலது கீழாக் கீழது மேலா |
| | மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை. |
| | வினைதெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம், |
| | ஆயற் பாற்ற தழிவு மஃதொழி |
| | வாயிலு மாமென வையகம் புகலும். |
| | |
| 100. | உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி |
| | தன்னையுஞ் சங்கரன் காக்க ! தயாநிதே ! |
| | அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட |
| | நின்புதல் வியையான் காணநே சித்தேன், |
| | அத்திரு வுறையும் அப்புறம் போதற் |
| 105. | கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய். |
| | |
| ஜீவ. | | ஆம் ! ஆம் ! சேவக ! அறைதி சென்று |
| | தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு |
| | நங்குல முனிவர் இங்குள ரெனவே. |
| | (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக) |