பக்கம் எண் :

மனோன்மணீயம்
5

குடிலன், (தனதுள்) நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல !
(சேவகனை நோக்கி) 110.சேவக ! முனிவர் சிவிகையுஞ் சின்னமும்
யாவுமவ் வாயிலிற் கொணர்தி.
சேவ,

சுவாமி.

(குடிலன் முதலோர் போக)

முதல் நகர்வாசி,கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய
நயப்புரை ! ஆ ! ஆ ! வியப்பே மிகவும் !
நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?
2-ம் நக,115.கேட்டோம். கேட்டோம் நாட்டிற் கென்குறை?
விடு ! விடு ! புராணம் விளம்பினன் வீணாய்.
3-ம் நக, குடிலன் செய்யும் படிறுகள் முனிவ
ரறியா தவரோ? சிறிதா யினுமவ
னுரைத்தது கருத்திடைக் கொண்டில ருவர்த்தே.
1-ம் நக, 120.ஆம் ! ஆம் ! அவன்முக மேமா றினதே.
விரசமா யரசனும் வியர்த்தனன். கண்டேன்.
2-ம் நக, முனிவரங் கோதிய தென்னை? முற்றுந்
துனிபடு நெருக்கிற் கேட்டிலன்.
3-ம் நக,

யாதோ -

மனோன்மணி யெனப்பெயர் வழங்கினர், அறிவை
4-ம் நக, 125.வாழ்த்தினர் போலும், மற்றென்? [கொல்?
2-ம் நக,

பாழ்த்த இத்

தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல்.
3-ம் நக, ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்?
வையகத் தவள்போன் மங்கைய ருளரோ?
அன்பே யுயிரா வழகே யாக்கையா
130.மன்பே ருலகுசெய் மாதவ மதனான்
மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங்
கமலையி னெழிலு மமையவோ குருவாய்ப்
பாண்டியன் றொல்குல மாகிய பாற்கடல்