| | கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த |
| 135. | மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே? |
| | |
| 2-ம் நக, | | அன்றியு முனிகட் கவள்மேல் வாஞ்சை |
| | இன்றுமற் றன்றே. இமையவர்க் காக |
| | முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி |
| | தவசிக டனித்தனி யவிசு சொரிந்துந் |
| 140. | தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து |
| | மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும் |
| | வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக |
| | மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி |
| | நெய்பெய் போழ்தி னெடுஞ்சுழி சுழித்து |
| 145. | மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப் |
| | புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா |
| | முனிவர் யாவரும் மணியென மொழியில் |
| | தங்க டலைமிசைக் கொள்வர், தரணியி |
| | லெங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே. |
| | |
| 4-ம் நக, | 150. | ஒக்கும் ! ஒக்கும் ! இக்குங் கைக்கு |
| | மென்னு மின்மொழிக் கன்னிக் கெங்கே |
| | யொப்புள துரைக்க ! ஓ ! ஓ ! முனிவ |
| | ரவ்வழி யேகுநர் போலும். |
| | இவ்வழி வம்மின் காண்குது மினிதே. |
| | (நகர்வாசிகள் போக.) |