பக்கம் எண் :

மனோன்மணீயம்
7

முதல் அங்கம்

2-ம் களம்

இடம் : கன்னிமாடம். காலம் : எற்பாடு.

மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க.

(ஆசிரியத்தாழிசை)


மனோன்மணி.துணையறும் மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
(கழல் விளையாடிப் பாட)அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
அணைந்துநீ றானானென் றாடாய் கழல்.1
வாணி, (மேற்படி)நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேயென் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல்.2
மனோ,இருளிற் றனித்துறை யேழையர் தங்கள்மேற்
பொருதலோ வீரமென் றாடாய் கழல்
போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல்.3
வாணி,எரிந்தன னாயிலென் னென்றென்றுந் தம்முடல்
கரிந்தது பாதியென் றாடாய் கழல்
கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல்.4
மனோ,தெருவிற் பலிகொண்டு திரிதரு மம்பலத்
தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல்
உருவங் கரந்தானென் றாடாய் கழல்.5
வாணி,உருவங் கரந்தாலென் னோர்மல ரம்பினால்
அரையுரு வானாரென் றாடாய் கழல்
அந்நட ராஜரென் றாடாய் கழல்.6

(பெருமூச்செறிய)

(நேரிசை யாசிரியப்பா)
மனோ, (சிரித்து)ஏதடி வாணி ! ஓதிய பாட்டி
லொருபெய ரொளித்தணை பெருமூச் செறிந்து?