நாராயண தாஸ். விஜயநகரம். வீணை வாசிப்பதிலும் அரிகதை செய்வதிலும் தேர்ந்தவர். நாராயண தீர்த்தர். முந்நூறு வருஷங்களுக்கு முன்னிருந்தவர். சமஸ்கிருதத்தில் ‘கிருஷ்ணதரங்கம்’ என்ற நூல் எழுதியிருக்கிறார். இவர் செய்த பண்கள் வெகு நன்றாயிருக்கும். நாராயண தேவர். 1765. இவர் "சங்கீத நாராயண" என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். நீ நீலகண்ட ஐயர். இவரை நங்கவரம் நீலகண்டைய ரென்றழைப்பார்கள். தியாகராஜ ஐயரவர்களின் மாணாக்கர். சங்கீதத்தில் சிறந்த வித்துவான். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி வைப்பதில் சிரத்தையும், சொல்வன்மையு முடையவர். இவரிடம் அந்தனூர் சுப்பையர், அவர் தம்பி சுந்தரம் ஐயர், மணித்தட்டு வைத்தி முதலானவர்கள் சிட்சை சொல்லிக் கொண்டார்கள். ப பகவான் தாஸ். ஆர்மோனியம் நன்றாய் வாசிப்பார். பகவான்லு. இவர்க்கு சிஷ்டு பகவான்லு என்று பெயர். வீணை சிஷ்டு சர்வ சாஸ்திரியாரின் சகோதரர். வீணையில் விசேஷ சாதகம் செய்திருக்கிறார். பக்கிரி. கும்பகோணம். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். பங்காருசாமி ஐயர். மைசூர் சமஸ்தான சங்கீத வித்துவான். வீணை சாம்ப ஐயரின் குமாரர். வீணை நன்றாய் வாசிப்பார். பஞ்சநத ஐயர். சாத்தனூர். இவர் பெரியோர் சொல்லிய முறைப்படி பாடி மனதை உருகும்படி செய்வார். சில வர்ணங்கள் செய்திருக்கிறார். பஞ்சநத சாஸ்திரியார். இவர் தரங்கம்பாடி சாமா சாஸ்திரியின் மாணாக்கர். தன் குருவைப் போலவே அநேக கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். நன்றாய்ப் பாடுவார். பஞ்சநத சாஸ்திரியார். பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் சகோதரர். இவர் தம் சகோதரரோடு இருந்து சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவராயிருந்தார். வெகு சுகமாய்ப் பாடுவார். பஞ்சாபகேச ஐயர். இவர் குரத்தவாசி வேங்கடரமண ஐயர் உமையாள்புரம் சுந்தரமையர் ஆகிய இவர்களின் மாணாக்கர். ராகம் பல்லவி கீர்த்தனைகள் சம்பிரதாயமாய்ப் பாடுவார். பஞ்சாபகேச ஐயர். இவர் தியாகராஜ ஐயரின் தௌகித்ரர். மானம்புச்சாவடி வேங்கட சுப்பையரின் மாணாக்கர். மிகவும் அருமையாகப் பாடுவார். பஞ்சாபகேச சாஸ்திரி. கும்பகோணம். இவரை திருப்பயணம் பஞ்சாபகேச பாகவதரென்று அழைப்பார்கள். சமஸ்கிருதத்திலும், சங்கீத சாகித்தியங்களிலும், அரிகதை செய்வதிலும் விசேஷ பாண்டித்தியமுடையவர். பஞ்சாபகேச சாஸ்திரி. திருவாரூர். இவர் இராகத்தையும் பல்லவியையும் பழைய வித்துவ சம்பிரதாயப்படி பாடுவார். தீட்சதர் கீர்த்தனைகளை மிக ஏற்பாட்டுடன் பாடுவார். பஞ்சாபகேச சாஸ்திரியார். உமையாள்புரம் கிருஷ்ண ஐயரின் மாணாக்கர். சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவர். சிட்சை சொல்லி வைப்பதில் மிகவும் சமர்த்தர்.
|