9. இடமுறை திரிந்த வட்டப்பாலையில் பிறக்கும் 12 பாலை.
சிலப்பதிகாரம் வேனிற் காதை, பக்கம் 202.
"குரல்வா யிளிவாய்க் கேட்டனள்"
இ-ள் குரல்முதலாக எடுத்து இளிகுரலாக வாசித்தாளென்க.
இனி வட்டப்பாலை இடமுறைதிரிபு கூறுகின்றார்.
"குன்றாக் குரற்பாத்தி தாரத்தி லொன்று
நடுவணிணைகிளை யாக்கிக்-கொடியிடையாய்
தாரத்தி லொன்று விளரிமே லேறடவந்
நேரத் ததுகுரலா நின்று"
என்-எனின், உழை குரலாகிய கோடிப்பாலை நிற்க இடமுறை திரியுமிடத்துக் குரல் குரலாயது செம்பாலை இதனிலே, குரலிற் பாதியும் தாரத்திலொன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித், தாரத்திலே நின்ற ஓரலகை விளரியின் மேலேறட, விளரி குரலாய்ப் படுமலைப்பாலையாம். இம்முறையே, துத்தம் குரலாயது செவ்வழிப்பாலையாம். இளி குரலாயது அரும்பாலையாம். கைக்கிளை குரலாயது மேற் செம்பாலையாம். தாரம் குரலாயது விளரிப்பாலையாம். என அந்தரமைந்து நீக்கி உறழ்ந்து கண்டுகொள்க. இவ்விடத்தில் தார நரம்பின் அந்தரக்கோலைத் தாரமென்றது.
"தன்னமுந் தாரமுந் தன்வழிப் படர"
என்னுஞ் சூத்திர விதியானென்க. இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும். அவற்றுள் செம்பாலையுட் பிறக்கும் பண்கள் பாலையாழ், நாகராகம், ஆகரி, தோடி, கௌடி, காந்தாரம், செந்துருத்தி, உதயகிரி யெனவிவை. பிறவும் விரிப்பின் உரை பெருகுமாதலின் அவற்றை வந்த வழிக் கண்டு கொள்க.
வட்டப்பாலை இடமுறை திரிபு கூறுகின்றார். இதன் முன் வலமுறை திரிந்த வட்டப் பாலையையும் அதன் சக்கரங்களையும் பார்த்தோம். அவைகளைப் போலவே இடமுறை திரிகின்ற பாலைகளுமிருக்கின்றன. இப்பாலைகளுள் நாம் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. (1) மீனத்தில் தோன்றும் உழையில் குரல் பிறப்பதொன்றும், (2) ரிஷபத்தில் பிறக்கும் குரல் ஒன்றும், (3) துலாத்தில் பிறக்கும் குரல் ஒன்றும், (4) தனுசில் பிறக்கும் குரல் ஒன்றும், ஆக நான்கும் முக்கியமானவை. இந்த நான்கும் முக்கியமானவை என்று நாம் சொல்லுகையில், பொருத்தமான சுரங்கள் அவைகளுக்கு அதிகமாய்க் கிடைப்பதே காரணம். இவைகள், இடம், வலம் என்பது பன்னிரண்டாம் ராசியிலிருந்து மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் என்ற முறைப்படி ச, ரி,க, ம என்று போவது வலமாகவும், ரிஷபத்தில் தோன்றிய குரல் ரிஷபம், மேஷம், மீனம், கும்பம், மகரம் என்று போவது இடமாகவும் ஆக இரண்டு விதம். இவற்றில் ச-ப முறைப்படி வலமுறை முன்னே பார்த்தோம். இனி ச-ம, முறைப்படி, இட முறையாக (1) குரலில் குரல் தோன்ற ரிஷபத்தில் செம்பாலை, (2) தாரத்தில் குரல் தோன்ற மீனத்தில் விளரிப்பாலை, (3) கும்பத்தில் அதாவது விளரியில் குரல் தோன்ற படுமலைப் பாலை, (4) தனுசிலுள்ள இளியில் குரல் தோன்ற அரும்பாலை, (5) துலாத்திலுள்ள உழையுள் குரல் தோன்ற