கோடிப் பாலை, (6) சிம்மத்துள்ள கைக்கிளையில் குரல் தோன்ற மேற் செம்பாலை, (7) கடகத்தில் துத்தத்துள் குரல் தோன்ற செவ்வழிப்பாலை, (8) குரலே, குரலானது செம்பாலை. இப்படியே இடந்திரிந்து வரும் பாலைகளில் இளி குரலாகிய அரும்பாலையின் சுரங்கள் வரும் விதம் பின் வரும் சக்கரத்தில் தெளிவாய்க் காணலாம். 
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள். குரல முதலாக எடுத்து இளி குரலாக வாசித்தாள் என்பதைக் கவனிக்கையில் ரிஷபத்தில் உள்ள குரலில் ஆரம்பித்து இளியை குரலாக வைத்து வாசித்தாள் என்பதாகும். ரிஷ பாதியாகவுள்ள ச, ரி, க, ம என்கிற நான்கு சுரங்களும் மந்தரஸ்தாயாகி ப, த, நி, ச என்றாகும். அதன் மேல் தனுசு முதல் தனுசு வரை ச, ரி, க, ம, ப, த, நி
|