பக்கம் எண் :

கட்சி அரசியல் 103

உரிமையும் உங்களுக்கு இல்லை," என்று சொல்லுவதே முடியாட்சி
முறையாகும்; அதுவே தடியாட்சி முறையுமாகும்.

     "புகை வண்டியில் ஏறும் உரிமை உங்களுக்கு உண்டு; எங்கே போக
வேண்டும் என்ற முடிவு செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு; இன்னார்
ஓட்ட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் உங்களுக்கு உண்டு",
என்று சொல்வதே குடியாட்சி முறை.

     ஆனால் இந்த இரண்டும் கெட்ட ஒரு முறையே இப்போது பல
நாடுகளிலும் வாழ்கின்றது. அதனால்தான், மக்கள் எல்லோரும் அமைதி
வேண்டும் என்று விரும்பினாலும் குழப்பமே நிறைந்திருக்கின்றது. போர்
வேண்டாம் என்று வெறுத்தாலும் புதுப்புதுப் போர்கள் கிளைத்துக்
கொண்டிருக்கின்றன.

     புகை வண்டியில் ஏறுதல், போக வேண்டிய திசையை முடிவு செய்தல்,
ஓட்டவேண்டியவரைத் தேர்ந்தெடுத்தல் இந்த மூன்றிலும் மக்களுக்குத்
தனித்தனி உரிமை இருக்கின்றதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
வண்டி ஓடும் போது எல்லோருக்கும் பொதுவாகவே ஓடவேண்டும்; அதில்
தனியுரிமை கேட்பது ஆபத்து. வண்டியைத் திருப்பும் வாய்ப்பு, எஞ்சினை
ஓட்டும் வாய்ப்பு எல்லோருக்கும் தனித்தனியாக இருந்தால், வண்டியும்
ஓடாது, பயணமும் முடியாது. அங்கே பொது முடிவும் பொதுப் போக்கும்
இருக்க வேண்டும். அதுபோல் உணவு, உடை, தங்குமிடம், முதலிய
நலன்களைத் தனி மனிதர் கையில் விட்டு வைத்தால், உணவுப் பஞ்சம்,
உடைப்பஞ்சம்,