| சொல்லி எந்த உரிமையும் இல்லாதவாறு உரிமையைப் பறிக்கும் முறையையே அமைந்திருக்கக் காணலாம். பாராளுமன்றம் அமைச்சர் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றது. அவர் அமைச்சர் குழுவை அமைத்துக் கொள்கின்றார். ஆகவே, அமைச்சரை ஏற்படுத்தும் பொறுப்பு ஒருவாறு பாராளுமன்றத்திடம் இருக்கின்றது. அந்தப் பாராளுமன்றத்தின் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கின்றது. ஒவ்வோர் உறுப்பினரையும் லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமை கொடுத்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தனியுரிமை உணர்ச்சியால் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றதா? தனியுரிமை என்றால், வாக்குரிமை கொடுப்பவர் அந்த உறுப்பினரை ஒருவாறு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் பரந்த நோக்கம் உடையவரா அல்லவா என்பதை எப்படி முடிவு செய்வது? ஆகவே தெரிந்த ஒருவருக்குத் தான் வாக்குரிமை தருவதில் பயன் உண்டு. ஆனால், இன்று நடக்கும் தேர்தலில் என்ன முறை இருக்கின்றது? உறுப்பினர் வேலூரில் வாழும் ஒருவராக இருக்கலாம். அவருக்குச் செங்கல்பட்டு ஜில்லா மக்கள் வாக்குரிமை கொடுத்துத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த மக்களுக்கு அவர் எப்படித் தெரியும்? அவரோடு நேரில் பழகித் தெரிந்து கொண்டவர்கள் அந்த ஜில்லாவில் இருபது முப்பது பேர் இருக்கலாம். ஆனாலும் செங்கல்பட்டு ஜில்லாவில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பற்றித் தீர்ப்புக் |