| கூறவேண்டும் அல்லவா? அதற்காக என்ன செய்கின்றார்கள்? சென்னையில் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் அந்த உறுப்பினரை அந்த மக்களுக்கு அறிமுகப்படுத்துன்றார். அவரும் தம் விருப்பம் போல் செய்வதற்குப் பெரும்பாலும் இடம் இல்லை. அதைவிடச் செல்வாக்கு உடையவர்களைக் கேட்டு நடக்கின்றார். தம் கட்சியின் தலைமை எங்கே இருக்கின்றதோ அங்கே இருந்துவரும் ஆணைகளை மதித்து அவற்றின்படி நடந்து கொள்ளுகின்றார். இல்லையானால் தம் பதவிக்கே இடையூறு வரும் என்பது அவருக்குத் தெரியும். எப்படியோ, அவரும், அவரைவிடச் செல்வாக்கு உள்ளவர்களும், கட்சியின் தலைமைப் பொறுப்பாளருமாகச் சேர்ந்து அந்த உறுப்பினரைத் தேர்தலில் நிறுத்தி வைக்கின்றார்கள். என்ன நம்பிக்கை கொண்டு அவரை நிறுத்துகின்றார்கள்? தம் சொந்தக் கருத்துகளை வெளியிடாமல், கட்சியார் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் அதையே போற்றி, எதிர்கட்சியார் என்ன செய்தாலும் அதையெல்லாம் தூற்றி, தமக்கு அடங்கி ஆணையை மீறாமல் நடக்க வல்லவரா என்று ஆராய்ந்து தெரிந்து கொண்ட பிறகே அவரைத் தேர்தலுக்கு நிறுத்துகின்றார்கள். ஆகவே, நிற்கும் உறுப்பினர் தனி உரிமை இழந்தவர் என்பதும், யாரோ சிலர் மேலே இருந்து ஆட்டி வைத்தால் ஆடக்கூடிய அளவுக்கு உரிமை இழந்தவர் என்பதும் தெளிவாகத் தெரிந்த பிறகே தேர்தலில் நிற்க முடிகின்றது. இது நிற்பவர் நிலைமை. இனி அவருக்கு வாக்குரிமை கொடுக்கும் மக்களின் நிலைமையை ஆராய்வோம். கட்சியைச் சார்ந்தவர்கள் பல ஊர்களுக்கும் வருகின்றார்கள். பல மேடைகளில் ஏறுகின்றார்கள். "இப்போது |