| பாராளுமன்றத்தை அசைக்கவும் கலைக்கவும் உரிமை இருக்க வேண்டும். அந்த உரிமை இருந்தால்தான் ஊர் மன்றத் திட்டம் உண்மைப் பயன் தரமுடியும். இல்லையானால், "அணையில் உங்களுக்கு உரிமை இல்லை; ஆனால் இதிலிருந்து வரும் நீரை உங்கள் ஊரிலுள்ள வயல்களுக்குப் பங்கிட்டுப் பாய்ச்சுவதில் உங்களுக்கே முழு உரிமை", என்று சொல்வதைப் போல் இருக்கும். உணவுப்பொருள்களையும் கைத்தொழில் பொருள்களையும் பொறுத்தவரையில் குடிசைக் கைத்தொழில் என்ற தலைகீழ் முறையைக் கையாள்வதால் பயனில்லை. ஆட்சி உரிமையைப் பொறுத்தவரையில் உரிமையில்லாமல் மன்றங்கள் அமைப்பதாலும் பயன் இல்லை. அணையில் தக்க அளவு உரிமை இருந்தால், ஏரியமைப்புத் திட்டமே வேண்டாம். அரசியல் உரிமையுள்ள ஊர்த்தேவை நிலை இருந்தால், வாணிகத்திலும் கைத்தொழில் பெருக்கத்திலும் அது வேண்டியதே இல்லை. வலுவான தலைமை அமைப்பு ஒன்று அரசியலில் இல்லையானால், பகைவர்கள் படையெடுப்புக்கு என்ன செய்வது என்று கவலை பிறக்கும். வலிய தலைமை அமைப்பு இருந்து மட்டும் என்ன பயன்? வல்லரசுகள் இருந்தும் உலகப் போர்களைத் தடுக்க முடிந்ததா? உண்மையை நோக்கினால், வல்லரசுகளே போருக்குக் காரணமாக இருக்கின்றன; வல்லரசுகளே போருக்கு இரையாகின்றன. படைவலிமை குறைந்த மற்ற நாடுகளில் அவ்வளவு அழிவும் அல்லலும் நேர்வதில்லை எனலாம். மற்ற நாடுகளின் உரிமையை அடக்கி அவற்றைச் சுரண்டி வாழ்கின்ற வல்லரசுகள் இருக்கின்ற வரைக்கும் போர்கள் இருந்துகொண்டே இருக்கும் என்றுதான் உலக அறிஞர்கள் |