3, ஊசலாட்டம் காதலனும் நல்லவன்; காதலியும் நல்லவள். அவர்கள் கொண்ட காதலும் நெறியானதே. ஆயினும் அவர்களின் காதலுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. தன் பெற்றோர், திருமணத்திற்கு உடன்படமாட்டார்களே என்று காதலி அவனோடு பழகவும் அஞ்சினாள்; தயங்கினாள். இதைக் கண்ட காதலன், அவளுக்குத் தன்மேல் அன்பு இல்லை என்று எண்ணிவிட்டான். "நான் இவ்வளவு உண்மையாக ஆர்வத்தோடு அன்பு செலுத்தியும், இவள் என் அன்பைப் புறக்கணிக்கின்றாளே" என்று வருந்தினான். இந்த எண்ணம் அவனுடைய அன்பான நெஞ்சை அறுக்கும் வாள் ஆயிற்று. அவனுக்கு வாழ்க்கையே வெறுத்தது. தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக்கொள்வது ஒன்றே வழி என்று எண்ணிவிட்டான். மடல் ஏறி உயிர் துறப்பதே கடமை என்று உணர்ந்து விட்டான். (மடல் என்பது பனங்கருக்கால் செய்த குதிரை. அதன் மேல் ஏறி ஊர்ந்து நாற்சந்தியில் நின்று உண்ணாநோன்பு கிடந்து உயிர் துறக்க முனையும் முயற்சி மடல் ஏறுதல் என்று கூறப்பட்டது. அது ஓர் அறிகுறியாய்த் தற்கொலை முயற்சியை உணர்த்தியது. மடல் ஏறுதல் என்றால், காதல் நிறைவேறப் பெறாதவர் தற்கொலை செய்து கொள்ளுதல் என்பது பொருள் ஆயிற்று.) எண்ணங்கள் மாறி மாறி வருகின்றன. தன்னை வருத்தித் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று |