குச் சிறப்பு ஏற்பட இருவரும் சேர்ந்து குடிப் பெருமையை உயர்த்துவதாகும், அத்தகைய கணவனும் மனைவியும் நாடும் உரிமைகள், ஒருதாளில் இரு பக்கங்களிலும் தனித் தனியே அமைந்த ஓவியங்களைப் போன்றவை. ஒருவர் உரிமை மற்றொருவரின் வாழ்வைக் கெடுப்பதில்லை, இருவர்க்கும் உள்ள உரிமையுணர்ச்சி போராட்டத்தை வளர்ப்பதும் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாக உள்ள பண்புகளை ஆராய்ந்தாலும், இவ்வாறு வாழ்க்கையை அமைத்தது பொருத்தம் என்றே விளங்குகிறது.
ஆண் பெண் இருவர்க்கும் பொதுவாக உள்ள இயற்கைப் பண்புகள் பல உண்டு. அன்பு, வெறுப்பு, சினம், இரக்கம், துன்பத்தில் கலங்குதல், இன்பத்தில் மகிழ்தல் முதலியவை இருபாலர்க்கும் பொதுவானவை. ஆயினும் சில பண்புகள் வேறுபட அமைந்துள்ளன. அடக்கம் பெண்ணின் சிறப்பியல்பாக அமைந்துள்ளது. வீரம் ஆணின் சிறப்பியல்பாக உள்ளது. பெண் தன் நெஞ்சை ஆள வல்லமை பெற்றிருக்கிறாள்; ஆண் தன் சுற்றுப்புறத்தை ஆள வல்லவனாக இருக்கிறான். பெண் அன்பைப் பெருக்குகிறாள்; ஆண் அறிவை விளக்குகிறான்.
இவ்வாறு உள்ள வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன? ஆண் உடம்பின் வன்மையும் பெண் உடம்பின் மென்மையும் காரணம் எனலாம். உடம்பை ஒட்டி உள்ளத்தின் பண்புகள் அமைவது இயற்கை சூழ்நிலையாலும் பழக்கத்தாலும் அந்தப் பண்புகள் மிகுதலும் குறைதலும் உண்டு. இல்வாழ்க்கையை ஓர் அறமாக அமைத்த முன்னோர்கள் இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்து, இயற்கைப் பண்புகள் இன்னவை எனத் தெளிந்து, ஆணுக்கு ஒருவகைக் கடமையும் பெண்ணுக்கு மற்றொருவகைக் கடமையும் அமைத்தார்கள். விஞ்ஞான |