கண்டு உணருமாறு மடலேற விரும்புகின்றது அவனுடைய மனம். ஆனால் பெண்ணின் மனம், அதற்கு நேர் மாறாக ஊரார் அறியாமல் இருக்க வேண்டும் என்று கவலைப்படுகிறது; தன்னைக் கண்டு சிரிப்பவர்களைப் பார்த்து நொந்து வருந்துகிறது. ஆணின் நெஞ்சில் வன்மை விளங்குகிறது, பெண்ணின் நெஞ்சில் மென்மை விளங்குகிறது; உடலின் தன்மை உள்ளத்திலும் புலனாகிறது. |