5. மனத்தின் மாறுதல் ஒருவனைப் பொய்யன் என்று ஊரார் பழிப்பார்களானால், அவனுள்ளத்தில் பொய் எழுவதற்கு அஞ்சும்; அந்தப் பழிச் சொல்லைக் கேட்டு அவன் மகிழமாட்டான். ஒருவனை ஏமாற்றுக்காரன் என்றோ, வஞ்சகன் என்றோ பழித்தாலும், அவன் அதைக் கேட்டு வருந்துவான். தொடர்ந்து ஏமாற்றவோ, வஞ்சிக்கவோ அவன் தயங்குவான். கொலை முதலிய பெரு குற்றங்கள் செய்தவர்களைக் குறித்துக் கூறவேண்டியதே இல்லை. அவர்கள் தங்கள் பெயர் குற்றவாளிப் பட்டியலில் வராமல் இருப்பதற்காகச் செய்யும் முயற்சிக்கு அளவு இல்லை. தப்பித் தவறிப் பழிச் சொல் வந்துவிட்டதானால், இனி இந்தத் துறைகளில் ஈடுபடக் கூடாது என்று உறுதி பூணுவார்கள். பொய்யர் முதலானவர்கள், வாழ்க்கையில் குற்றங்கள் செய்தபோதிலும், பழிச்சொல் வராமல் காத்துக் கொள்ள விரும்புகிறார்கள். செயலளவில் திருந்தாவிட்டாலும் உள்ளத்தளவில், திருந்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆகையால் ஊரார் உலகத்தாரின் பழிச் சொல்லுக்கு அஞ்சி |