பக்கம் எண் :

26குறள் காட்டும் காதலர்

வாழ்கிறார்கள், எவ்வளவு பொல்லாதவர்களாக இருந்தாலும்,
எவ்வளவு குற்றங்கள் செய்பவர்களாக இருந்தாலும், பிறர் தங்களைப்
பழிக்கக்கூடாது என்று கவலையோடு வாழ்கிறார்கள்.

காதலர்களும் உலகத்தாரின் பழிச் சொல்லுக்கு அஞ்சுகிறார்கள்.
திருமணத்துக்கு முன் தங்கள் காதலுறவை ஊரார்
தெரிந்துகொள்ளாமலிருக்க வேண்டும் என்று, யாரும் காணாதபடி
மறைவாகப் பழகுகிறார்கள், ஊராரின் பழிக்கு அஞ்சியே
பழகுகிறார்கள். அவர்கள் எவ்வளவோ அஞ்சி நடந்தபோதிலும்,
ஊரார் எப்படியோ அறிந்து கொள்கிறார்கள். உலைவாயைமூடினாலும்
ஊர்வாயை மூட முடியாது என்பது உண்மை ஆகிறது. ஒருவர்
இருவராக, மெல்ல மெல்லச் சிலர், அவர்களின் காதலைப்பற்றிப் பேசத்
தொடங்குகிறார்கள். "இன்ன வீட்டுப் பெண் இன்னானோடு பழகுகிறாள்,
இவர்களுக்கிடையே காதல் வளர்ந்துவிட்டது, உமக்குத் தெரியுமா?"
என்று ஒருவரோடு ஒருவர் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள், இது
அம்பல் எனப்படும். பிறர் காதில் விழாதபடி பேசுகிறார்கள், பிறகு,
பிறர் கேட்கும்படியாகவும் பேசத் தொடங்குகிறார்கள், இதுதான் ‘அலர்
தூற்றல்‘ என்பது,

இப்படி ஊரார் தூற்றும் அலருக்கு, காதலர்கள் தொடக்கத்தில்
அஞ்சுகிறார்கள். ஆனால் நாளடைவில் இந்த அச்சம் குறைந்து
போகிறது, நெருக்கடி நேரும்போது, அலருக்கு அஞ்சும் நிலைமை
அடியோடு மாறி, அதையே வரவேற்று விரும்பும் மனநிலை
ஏற்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?

பொய்யர் திருடர் முதலானவர்களைப் பழிக்கப் பழிக்க, அவர்களின்
நெஞ்சம் அவர்களை மேன்மேலும் சுடுகிறது. அதனால் மேலும்
குற்றம்செய்யத் தயங்குகிறார்கள். காதலர்