காதல் இத்தன்மையானது என்பதையும், அலருக்கு அஞ்சாத வகையில் மனத்தில் மாறுதல் ஏற்படுவதையும் இது புலப்படுத்துகிறது. இந்த உண்மை தெரிந்தால் ஊரார் அலர் தூற்றாமல் விட்டு விடுவார்களாம். பிரிவுத் துன்பத்தை மறப்பதற்கு உதவியாக-- உயிர் நிற்பதற்கு உதவியாக--உள்ள அலர் இருப்பது தன் 'பாக்கியம்' என்று எண்ணுகிறான் காதலன். ஊராரின் அறியாமை அவனுடைய பாக்கியமாம். 'அதனைப் பலர் அறியார் பாக்கியத்தால்' என்கிறான். |