யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். (குறள், 1094) இருவரும் ஒருமுறை நேருக்குநேர் பார்க்க நேர்ந்தது. அவனும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். ஒத்த தன்மையான அந்தப் பார்வையிலே ஒரு நிறைவு ஏற்பட்டது; அவன் மகிழ்ந்து எண்ணுகிறான். "கண்ணோடு கண்கள் பார்க்கும் பார்வை ஒன்றுபட்டு விட்டால், அதற்குமேலவாயால் சொல்ல வேண்டியது என்ன உள்ளது? வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை." கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. (குறள், 1100) |