இன்று. அன்பாய் உணர்ந்து துன்பமுற்று வருந்துவது ஏனோ? எனக்கு இந்தக் காதல் நோய் செய்தவை இந்தக் கண்களே ஆகையால் இவை இவ்வாறு துன்பப்பட்டது மிகப் பொருத்தமானதே. அன்று விரும்பி நெகிழ்ந்து அவரைக் கண்ட கண்கள் (தாம் செய்த தீவினையால்) இன்று வருந்தி அழுது அழுது அழுவதற்குக் கண்ணீரும் இல்லாமற் போகட்டும்" என்கிறாள் தலைவி, கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. (குறள், 1171) தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன், (குறள், 1172) ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. (குறள், 1176) உழந்துழந்து உள்நீர் அறுக இழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். (குறள், 1177) கண்களை மூடிப் படுத்தாலும் உறக்கம் வரவில்லை. உறக்கம் இல்லாமல் வருந்தினாள் காதலி. அந்நிலையில் மற்றொரு நிலையும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவர் வராத காரணத்தால் இன்று கண்கள் உறங்குவதில்லை. ஆனால் அவர்வந்த நாட்களிலும், அவரைக் கண்ட மகிழ்ச்சிப் பெருக்கால் அவை உறங்கவில்லை என்பதை நினைத்தாள். "ஐயோ! இந்தக் கண்கள், அவர் வராவிட்டால் கவலையால் |