பக்கம் எண் :

54குறள் காட்டும் காதலர்

தாம்வீழ்வார் தம்வீழப்
பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழ்இல் கனி. (குறள், 1191)

வாழ்வார்க்கு வானம்
பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி. குறள், 1192)

நாம்காதல் கொண்டார்
நமக்குஎவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை. (குறள், 1195)

ஒருதலையான் இன்னாது
காமம்காப் போல

தலை யானும் இனிது. (குறள், 1196)

அப்போது தோழி அங்கே வந்தாள். தலைவியின் சோர்வையும்
அதன் காரணத்தையும் உணர்ந்த தோழி தேறுதலாகச் சில சொற்கள்
சொன்னாள். "ஆண்கள் எத்தனையோ கடமைகள் உடையவர்கள்.
வெளியூர்களுக்குச் சென்றுவரும் வேலைகள் உடையவர்கள்.
இப்படித்தான் சில நாட்கள் பிரிந்து சென்று திரும்புவார்கள். அந்தப்
பிரிவுக் காலத்தில் பொறுத்திருக்க வேண்டியது பெண்களின் கடமை.
அதோ மூன்றாம் வீட்டார் இல்லையா? பக்கத்துத் தெருவில் உறவினர்
வீட்டார் இல்லையா? நீ மட்டும் இவ்வாறு கலங்கலாமா?" என்றாள்.
காதலிக்கும் அந்தக் குடும்பங்களைப் பற்றித் தெரியும். அவர்கள்
எப்படித்தான் பிரிந்து வாழ்கிறார்களோ என்று வியந்தாள். "விரும்பும்
காதலரின் அன்புமொழிகளைக் கேளாமல் உயிர் வாழ்கின்றவர்களைப்
போல் கல்மனம் உடையவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது"
என்றாள்.