பக்கம் எண் :

11. கனவின் உதவி61

கனவின் ஆற்றலை எண்ணுகிறாள். அது செய்த நன்மை பெரிது
என்று உணர்கிறாள். "வராமல் வருகின்றவர்களுக்கு விருந்து செய்து
மகிழ்விப்பது என் கடமை ஆகும். யார் புதிதாக வந்தாலும் அவருக்கு
விருந்து செய்து மகிழ்வித்திருக்கிறேன்; அதனால் நானும்
மகிழ்ந்திருக்கிறேன். இந்தக் கனவும் நல்ல கனவாக, புதிய கனவாக
வந்து மகிழ்ச்சி தந்தது. புதிதாக வந்தது மட்டும் அல்லாமல், என்
துயரத்தை மாற்றி அரிய உதவி செய்தது. தோழியும் மற்றவர்களும்
எவ்வளவோ ஆறுதல் கூறி என் துயரத்தை மாற்ற முயல்கிறார்கள்.
அவர்களின் ஆறுதலான மொழிகளால் என் துயரம் வளர்ந்ததே
தவிரக் குறையவில்லை.

ஆனால் இந்தக் கனவு எப்படியோ என்னுடைய துயரத்தை
மாற்றிவிட்டதே" என்று நன்றியுணர்ச்சியோடு உணர்கிறாள்.

"இத்தகைய உதவி செய்த கனவுக்கு என்ன விருந்து
செய்யப்போகிறேன்?" என்று அன்போடு எண்ணுகிறாள்.

காதலர் தூதொடு
வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து. (குறள், 1211)

மறுநாளும் அவளுடைய நெஞ்சில் பழையபடியே காதலனைப்
பற்றிய சிந்தனை நிரம்புகிறது. ஏக்கம் வளர்கிறது; துயரம்
பழையபடியே தலையெடுக்கிறது. பெற்ற ஆறுதல் மறைந்துவிடுகிறது.
முன் போலவே பகலெல்லாம் துயரத்தில் கழிகிறது. இரவிலும்
நெடுநேரம் உறக்கம் இல்லாமல் வருந்துகிறாள். நீண்ட துயரத்திற்குப்
பிறகு உறக்கம் வருகிறது.

இந்தக் கனவில், காதலனுடைய தூது வரவில்லை. காதலனே
வருகிறான். காதலன் தன்னுடன் இருந்து மகிழ்வது போலவே கனவு
காண்கிறாள். உடனே விழித்