பக்கம் எண் :

62குறள் காட்டும் காதலர்

தெழுகிறாள். சுற்றிப் பார்க்கிறாள். கண்டது கனவு என உணர்ந்து
ஏமாற்றம் அடைகிறாள்.

மீண்டும் அவள் நெஞ்சம் காதலனையே எண்ணுகிறது. அவனுடைய
அழகிய வடிவமும் இனிய மொழியும் கனிவான பார்வையுமே
அவளுடைய நெஞ்சில் குடிகொண்டு விளங்குகின்றன.

அவள் எண்ணிப் பார்க்கிறாள்: "என்ன விந்தை; படுக்கையில்
படுத்துக் கண்மூடி உறங்கியபோது, அவர் என் தோள்மேல் கிடந்தார்.
விழித்த பிறகு என் நெஞ்சிலே குடிகொண்டிருக்கிறார். எவ்வளவு
விரைவில் இப்படி மாறுகிறார்?" என்கிறாள்.

துஞ்சுங்கால் தோள்மேலர்
ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. (குறள், 1218)

இப்போதும் அவள் பழைய துயர நிலையை எண்ணிப் பார்க்கிறாள்.
பகலெல்லாம் வருந்திய மனம் இந்தக் கனவைக் கண்ட பிறகு,
எதையோ பெற்றதுபோல் மகிழும் மகிழ்ச்சியை எண்ணுகிறாள்.கனவு
பொய் என்பதையும், அது உண்மையாக வரவில்லை என்பதையும்
நன்றாக உணர்கிறாள். ஆனாலும் உள்ளத்தில் உள்ள துயரத்தை
மாற்றும் ஆற்றல் அந்தக் கனவுக்கு இருப்பதை எண்ணிப்
பார்க்கிறாள். நேரில் காதலன் வரவில்லை என்பது ஒன்று தவிர,
காதலனைக் கண்டது போன்ற மகிழ்ச்சி சிறிது ஏற்படுவதை
உண்ர்கிறாள். அவ்வாறானால், நனவுக்கும் கனவுக்கும் என்ன
வேறுபாடு என்ற ஆராய்ச்சியில் அவளுடைய மனம் ஈடுபடுகிறது.
முன்னெல்லாம் நனவில் காதலனைக் காணும்போதுகாணுமளவிற்கு
மட்டுமே இன்பம் இருந்தது. இப்போது கனவில் காணும்போது இன்பம்
அப்படிப்பட்டதாகவே உள்ளது.