பக்கம் எண் :

66குறள் காட்டும் காதலர்

வில்லை. அதற்குள் கனவு கலைந்துவிட்டது. இன்று இரவு கனவு
வாய்த்து, அந்தக் கனவில் காதலனைக் காணும்போது அவனோடு பேச
வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் என்ன பேசுவது? ஒன்று
சொல்லலாம். பிரிவுத் துயரத்தைத் தாங்கிக் கொண்டு தான் உயிருடன்
வாழ்ந்திருக்கும் தன்மையை அவனுக்குச் சொல்லலாம். "ஆனால்
கனவில் அவர் வரவேண்டுமே. அவர் வருவார். தவறமாட்டார்.
அதற்குத் தக்க கனவு வரவேண்டுமே. கனவும் தவறாமல் வரும்.
உறக்கம் வந்தால் போதும். உறக்கம் வருவதற்கு என்ன செய்வது?
இந்த என்னுடைய கண்களைத்தான் வேண்டிக்கொள்ள வேண்டும்.
கண்களை இரந்து வேண்டிக் கொள்வேன். என் வேண்டுகோளுக்கு
இணங்கிக் கண்கள் உறங்குமானால், என் விருப்பம் நிறைவேறும்.
கனவில் அவரைக் கண்டவுடன் அவரிடம் இந்தச் செய்தியைச்
சொல்லிவிடுவேன். ஆனால் கண்கள் உறங்கவேண்டுமே. அதற்கு
என்ன செய்வேன்? கண்களை இரந்தாவது வேண்டிக் கொள்வேன்"
என்று கவலைப்படுகிறாள்.

கயலுண்கண் யான்இரப்பத்
துஞ்சின் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன். (குறள், 1212)