பக்கம் எண் :

13. அவர் கொடுமை75

13. அவர் கொடுமை

வலிமை, செல்வம், கல்வி, புகழ் முதலியவை ஒருவர்க்குப்
பெருமிதம் தருவது போலவே, அழகும் பெருமிதம் தருவதாகும்.
அழகு மிகுந்த பெண்கள் தங்கள் அழகை நினைந்து ஒருவகைச்
செருக்குக் கொள்வது இயற்கை.

இந்த நங்கையும் இவ்வாறு தன் அழகால் பெருமிதம் கொண்டு
வாழ்ந்தவள். ஆனால் காதலன் விட்டுப் பிரிந்த பிறகு, தன் அழகைப்
பற்றிய எண்ணமும் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்தாள். அந்த
ஏக்கத்தால் அவள் அறியாமலே அவளுடைய மேனி அழகு இழந்த
நிலையில் ஒரு நாள் கண்ணாடியின் முன் வாடியது; கண்கள் அழகு
இழந்தன. அவ்வாறு வாடி நின்றபோது, தன் கண்களைத் தானே
பார்த்துத் திடுக்கிட்டாள். "என் கண்கள் எவ்வளவு அழகாக இருந்தன!
இந்தக் கண்களுக்கு முன்னே எந்த மலர்களும் அழகில் போட்டியிட
முடியாது என்று தோழிமார் எல்லாரும் பாராட்டினார்களே. இப்போது
இவ்வளவு வாடிச் சீர் கெட்டனவே! இவ்வாறு அழகு கெட்டு
வாடியதற்குக் காரணம் என்ன? தொலை நாட்டுக்குச் சென்றுள்ள
காதலரை நினைத்து நான் ஏங்கிய ஏக்கம்தான் காரணம். அவர் நமக்கு
இந்தத் துன்பத்தைத் தந்துவிட்டுச் சென்றார், அதனால் இப்போது
என் கண்கள் அழகு இழந்தன. நறுமலர்களை