வென்று விளங்கிய கண்கள் இப்போது மலர்களைக் கண்டால் நாணும்படியான நிலையை அடைந்து விட்டன" என்கிறாள். சிறுமை நமக்கு ஒழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் (குறள், 1231) அந்த ஊரில் வாழும் ஒருத்தி ஒருநாள் வீட்டின் பக்கமாக வந்தாள். வந்தவள் நங்கையை உற்றுப் பார்த்தாள். ‘ஏன் அம்மா ஒருவகையாக இருக்கிறாயே! காரணம் என்ன அம்மா? உன் கணவர் ஊரில் இல்லையா? எங்காவது வெளியூர்க்குப் போயிருக்கிறாரா?" என்று கேட்டாள். நங்கை என்னவோ சொல்லி அவளை அனுப்பி விட்டாள். இப்போது தனக்குள் எண்ணிப் பார்க்கத் தொடங்குகிறாள், "வந்தவளுக்கு இது எப்படித் தெரிந்தது? என் தலைவர் வெளியூருக்குப் போயிருக்கும் செய்தியை நான் யாருக்கும் சொல்லவில்லையே. வந்தவள் என் கண்களையே உற்று உற்றுப் பார்த்தாள். அதனால் என் கண்கள் காதலரின் பிரிவை விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். காதலர் எனக்கு அருள் செய்யவில்லை என்ற செய்தியை, இந்தக் கண்கள் இப்படி நிறத்தின் மாறுதலாலும் கண்ணீரின் கலக்கத்தாலும் வந்து பார்க்கின்ற எல்லோருக்கும் சொல்லிவிடுகின்றன போலும்" என்கிறாள், நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண், (குறள், 1232) இதன் பிறகு, அயலார் யார் வந்தாலும் நங்கை தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, கண்ணீரின் ஈரம் இல்லாதவாறு செய்துகொண்டு, மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிக்கலானாள். மற்றொரு நாள் இன்னொருத்தி இந்த வீட்டின் |