பக்கம் எண் :

14. பேதை நெஞ்சம்79

14. பேதை நெஞ்சம்

மனம் என்பது மிக விந்தையானது. பல வேளைகளில் நாம் அதன்
போக்கின்படியே விட்டுப் பின் தொடருகிறோம். அதனால், நாமும்
நம்போக்கும் தனியே விளங்குவதில்லை. ஆனால், சில வேளைகளில்,
மனத்தின் போக்கு ஒன்றாகவும், நம்முடைய போக்கு ஒன்றாகவும்
இருக்கும். அதுதான் மனப் போராட்டம் என்பது. ஊருக்கு
இன்றைக்கே புறப்படலாம் என்று துணியும் போது மனம் வேண்டா
என்று தடுத்து நாளைக்குப் புறப்படச் சொல்லித் தயங்கும். ஊருக்கு
நாளைக்கு புறப்படுவோம் என்று நாம் துணிந்தால், மனம் இன்றைக்கே
புறப்படுதல் நல்லது என்று தூண்டும். ஒரு பொருளைப் பெற
வேண்டும் என்று மனம் விரும்பி அலையும்; அந்தப் பொருளைப்
பெற்றுவிட்ட பிறகு, மனம் அந்தப் பொருளை மறந்து வேறொன்றை
நாடும். இவ்வாறு மனம் வேறு போக்கில் நிற்பதற்கு ஒரு காரணம்
கூறத் தேவையில்லை. பலூனில் ஒரு புறத்தை அழுத்தினால் மற்றொரு
புறம் மேலெழுவது போன்றது இது. மூளையில் பலவகை அனுபவங்கள்
தொடர்புபட்டுப் பதிந்துள்ளன. ஒரு பகுதியில் நாம் முனைந்து
நிற்கும்போது, அதற்குத் தொடர்பான மற்றொரு பகுதியின் அனுபவம்
மேலெழுந்து நிற்கிறது. அதைத்தான் நமக்கும் நம் மனத்திற்கும்
போராட்டம்