பக்கம் எண் :

80குறள் காட்டும் காதலர்

என்கிறோம். வேடிக்கையாகப் பார்த்தால், நம் மனம் அடிக்கடி
நமக்கு எதிர்க்கட்சியாக அமைவதை உணரலாம். காதலரின் வாழ்வில்
இத்தகைய மனப் போராட்டத்தைக் காணலாம். காதலர் ஒன்று
வேண்டும் என்று முனையும் போது மனம் அது வேண்டா என்று
தயங்கும். ஒன்றைச் சிறந்தது என்று போற்றும் போது, மனம் அதில்
குற்றம் கண்டு ஒதுங்கும். இவ்வாறு எதிர்க்கட்சியாக நிற்கும் மனத்தின்
தன்மை விந்தையானது எனலாம்.

காதலன் பிரிந்து போய் நாள் பல ஆயின, இன்னும் வரவில்லை,
நங்கை கலங்கி வருந்துகிறாள், அப்போது அவளுடைய நெஞ்சில்
மாறான எண்ணம் உண்டாகிறது. "அவர் நம்மைப்பற்றிக்
கவலைப்படாமல் வெறுத்து விட்டுச் சென்றார். வெறுத்துச் சென்ற
காரணத்தால்தான் அவர் இன்னும் வரவில்லை. ஆகையால் அவரை
மறந்து கைவிடவேண்டும்" என்ற எண்ணம் எழுகிறது. தன் நெஞ்சில்
இப்படிப்பட்ட எண்ணம் எழுவதைப்பற்றி அவள் சிந்திக்கிறாள்.
"அவர் நம்மை வெறுத்திருக்கலாம். ஆனாலும் நாம் எப்படி அவரை
நாடாமல் மறந்துவிட முடியும்? நம்மை அவர் மறந்தாலும் அவரை
நாம் மறக்க முடியவில்லையே" என்று எண்ணுகிறாள். "நெஞ்சே! நாம்
விரும்பி நாடினாலும் நம்மை அவர் நாடவில்லை என்பது
உண்மைதான். அதனால் அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று
எண்ணி அவருடைய உறவைக் கைவிடமுடியுமா?" என்று நெஞ்சுடன்
கூறுகிறாள்.

செற்றார் எனக்கை
விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர், (குறள், 1245)

நெஞ்சம் மறுபடியும் எதிர்க்கட்சியாகவே நிற்கிறது. இப்படி ஏன்
வருந்திக் கலங்க வேண்டும் என்று கடிந்துகூறு