கிறது. நங்கை அந்த நெஞ்சத்தை நோக்கி, "நெஞ்சே! நான் கலங்காமலிருப்பதற்கு வேறு ஏதேனும் வழிஉண்டா? என் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தாக ஏதாவது மருந்து ஒன்றை நினைத்துப் பார்த்துச் சொல்ல மாட்டாயா?" என்கிறாள். நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து (குறள், 1241) அது ஒருவேளை. அந்த வேளை கழிந்தது. அடுத்த வேளையில் நங்கையின் போக்கு மாறியது. கலங்கி வருந்திய அவள், இப்போது தன்னைத்தானே தேற்றிக் கொண்டு உறுதியாக நடக்கத் தொடங்குகிறாள். "அவர் நம்மைப்பற்றி எள்ளளவும் வருந்துவதாகத் தெரியவில்லை. நாம் மட்டும் ஏன் அவரை நினைத்து ஏங்கவேண்டும்?" என்று தெளிவோடு நடக்கத் தொடங்குகிறாள். ஆனால், மனம் அதற்கு நேர் மாறான போக்கில் நின்று கலங்குகிறது. காதலனைப் பற்றியே அடிக்கடி எண்ணி ஏங்குகிறது. அவள் நெஞ்சை நோக்கிக்கூறுகிறாள். "நெஞ்சே! எந்நேரமும் அவர்க்குப் பின் செல்கிறாயே. அவர் நமக்காகப் பரிந்து அன்பு செலுத்தவில்லை என்று ஏங்கிப் பின் செல்கிறாயே, நீ பேதை" என்கிறாள். பரிந்துஅவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு, (குறள், 1248) நெஞ்சம் அந்தக் காதலனைக் தேடிப் பின் செல்லாமல் நின்றுவிட்டதாம். ஆனால் இப்போதும் அது முன்போலவே வருந்துகிறது. நங்கையுடன் இருந்தபடியே காதலனை நினைந்து நினைந்து வருந்துகிறது. அவள் இப்போது நெஞ்சைக் கடிந்துரைக்கிறாள். "நெஞ்சே! நமக்கு இந்தத் |