பக்கம் எண் :

15. அழைத்துப் போ83

15. அழைத்துப் போ

காதலனைப் பிரிந்தபின், பிரிவாற்றாமல் வருந்தும் காதலி
ஒருத்தியின் துயரத்தை விளக்குகிறார் திருவள்ளுவர். அவளுடைய
வாயாலேயே அந்தத் துயரம் புலப்படும்படியாகச் செய்கிறார்.

காதலனைக் கண்டு நாட்கள் பல ஆயின. காண வேண்டும் என்ற
ஆசையால் நாள்தோறும் வேளைதோறும் எதிர்பார்க்கிறாள். காதலன்
வரும் வழியை அடிக்கடி பார்க்கிறாள். அவன் வந்து நிற்கும் இடம்
முதலியவற்றையே நோக்குகிறாள். என்ன வேலை செய்தாலும், எவர்
வந்து போனாலும், கண்கள் அப்போதுகூட, அந்த வழியையும்
இடத்தையுமே நோக்கிய வண்ணம் இருக்கின்றன.

அவளுடைய நெஞ்சமோ, ஊர்ச் செய்திகளில் ஆர்வம்
கொள்ளவில்லை, தோழி முதலானவர்கள் நெருங்கி வந்து
பேசும்போதும் அவர்களின் பேச்சில் ஈடுபடாமல், அரை குறையாய்க்
கேட்டுக்கொண்டே, அந்த அன்பு நெஞ்சம் காதலனை நினைந்து
நினைந்து ஏங்கி வருந்துகிறது. தோழி முதலானவர்கள் பேசும்போது
‘ஊம்‘ கூட்டுகிறாள். அவர்கள் ஏதேனும் கேள்வி கேட்கும்போதும்
‘ஊம்‘ என்கிறாள், கேட்ட கேள்வியும் கவனிக்காமல் எதைப் பற்றி
எண்ணி