பக்கம் எண் :

15. அழைத்துப் போ85

கின்றன; ‘அம்மா, வா போகலாம், வா போகலாம்’ என்று தாயைத்
தின்கின்றன. தாய் என்ன செய்வாள்! நோயுற்று மெலிந்த தன் உடல்
கொண்டு வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்ல அவளால்
முடியவில்லை. பெரிய குழந்தையைப் பார்த்து வேண்டுகிறாள்:
"என்னை வற்புறுத்தித் தின்கிறார்கள் இவர்கள்! நீ போகிறாய்
அல்லவா? இவர்களையும் உன்னுடன் அழைத்துச்செல்" என்று
சொல்கிறாள்.

இரங்கத் தகுந்த இந்தத் தாயின் காட்சி நம் மனக்கண் முன்
தோன்றுமாறு செய்கிறார் திருவள்ளுவர். நாடகம் கற்பனையாய்
அமைகிறது.

பிரிவாற்றாமையால் வருந்தும் காதலி தன்நெஞ்சைப் பற்றி
எண்ணுகிறாள். நெஞ்சம் தன்னை விட்டு, தன் உறவு, குடும்பம்,
தோழியர், சுற்றுப்புறம், ஆடல் பாடல் எல்லாவற்றையும் விட்டு,
காதலனை நாடிச் செல்வதை உணர்கிறாள். அந்த நெஞ்சம்
தன்னைவிட்டு இவ்வாறு செல்லும் போதெல்லாம், கண்கள் காதலனைக்
காணத் துடிப்பதை உணர்கிறாள்; காதலன் வரும் வழியையும் பழகிய
இடத்தையுமே கண்கள் அடிக்கடி கண்டுகண்டு, அந்த அழகனுடைய
வடிவத்தைக் காணத் துடியாய்த் துடிப்பதை உணர்கிறாள். கண்கள்
அவளைத் தூண்டுகின்றன. இருந்த இடத்தை விட்டு எழுந்து,
குடும்பத்தை விட்டுப்பிரிந்து, காதலன் வரும் வழியில் போய்
அவனைக் காண வேண்டும் என்று அவளை வற்புறுத்துகின்றன.
நெஞ்சமோ, இவ்வாறு துடிப்பதும் இல்லாமல், வற்புறுத்துவதும்
இல்லாமல், அவளைக் கேளாமலே போய்க்கொண்டிருக்கிறது.

கேளாமல் போய்க் கொண்டிருக்கும் தன் நெஞ்சத்தைக் கூவி
அழைத்து நிறுத்துகிறாள் காதலி. "ஏ நெஞ்சமே! நீ மட்டும்
போகிறாயே. இந்தக் கண்களும் அவரைக் காணத்