துடிக்கின்றன. இதற்காக என்னைப் பிய்த்துக் தின்கின்றன. இவற்றையும் உன்னோடு அழைத்துக்கொண்டு போ" என்கிறாள். கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவைஎன்னைத் தின்னும் அவர்க்காண லுற்று, (குறள், 1244) உருவமற்ற காதல் துயர் உருவம் பெற்று விட்டது, காதலியின் நெஞ்சம் நடந்து போகிறது, கண்கள் சிறு குழந்தைகளாகக் கற்பனை வடிவம் பெற்று, மெலிந்த தாயை வற்புறுத்துகின்றன. அவள் நெஞ்சை நோக்கிக்கூறி வேண்டுகிறாள். நெஞ்சம் போவதை நிறுத்திக் கேட்கிறது. ஒருத்தியின் துயர் ஒரு நாடகம் ஆகிறது; நால்வர் நடிக்கும் நாடகம் ஆகிறது. கலங்கி வருந்தும் துயரம் என்ற ஒன்று, திருவள்ளுவரின் கற்பனையில் உருவம் பெற்று அமையும் நாடகக் காட்சி, இது. |