பக்கம் எண் :

16. தவறு தெரிவதில்லை87

16. தவறு தெரிவதில்லை

அன்பு வாழ்வை இயக்கும் பெருஞ்சக்தி. அதற்கு முன் மற்ற
எல்லாம் மறைந்துவிடும். எவ்வளவு தடைகளையும் கடந்து வெல்லும்
ஆற்றல் அன்புக்கு உண்டு. காதலரின் அன்பும் அத்தகைய ஆற்றல்
உடையது. காதலிக்குக் காதலனுடைய காதல் பற்றியே ஐயம் ஏற்படும்;
வெறுப்பும் ஏற்படும். ஆனால், காதலன் திரும்பி வந்தவுடன், அந்தப்
பழைய அன்பு தலையெடுத்து விடும்; இடையே தோன்றிய சோர்வு,
ஐயம், வெறுப்பு எல்லாம் மறைந்துவிடும். காதலனுடைய அன்பான
மொழிகளைக் கேட்டவுடன், அவன்மேல் கொண்டிருந்த கடுமையான
எண்ணங்கள் எல்லாம் பறந்து ஓடிவிடும். பழைய அன்பின் வயப்பட்டு
நெஞ்சம் குழைந்து விடும்.

காதலன் தன்னை மறந்து தன் அன்பைக் கைவிட்டு, தவறான
வாழ்வு நடத்துவது போல் காதலிக்குத் தோன்றியது. அதனால்
அவன்மேல் வெறுப்புக் கொண்டு அவனுடைய அன்பை
ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட வேண்டும் என்றும், அவனை
வெறுத்து ஒதுக்க வேண்டும் என்றும் அவள் தன் மனத்தினுள்
உறுதியோடு இருந்தாள். காதலன் திரும்பி வந்து பழையபடி அன்பு
மொழிகள் பேசி அணுகியபோது, அவளுடைய உறுதி இருந்த இடம்