இதைக் கணவனிடத்திலே சொல்லிவிட வேண்டும் என்று துணிந்தாள். "கள் உண்டு மகிழ்ந்தவர்கள் மேன்மேலும் கள்ளை விரும்புகிறார்கள். அதுபோல், இழிவான துன்பங்களையே விளைத்தபோதிலும், உன் மார்பையே விரும்ப நேர்கிறது" என்றாள், இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள், 1288) |