| பேசுவதென்பது, ஒரு கூட்டத்தார் பிள்ளைப் பருவத்தில் இயல்பாகவும் எண்ணாதும் பிறர் வாயினின்று அறிந்து வழங்குவதேயன்றி, பிற் காலத்தில் ஓரிருவர் நூல் வாயிலாகக் கற்று மொழிவதன்று. |
| பேசா மொழியெல்லாம் இறந்த மொழியே. இனி, பேசா மொழிகளாகச் சில செயற்கை மொழிகளும் உள. அவை இலக்கிய நடை மொழியாகிய சமற்கிருதமும் புதுப்புனைவு மொழியாகிய எசுப்பெரென்றோவும் (Esperanto), போல்வன. அவை பிறந்தனவுமல்ல; இறந்தனவுமல்ல; உயிரற்ற பாவை போல்வனவே. |
| மொழி மக்கள் வாயினின்று தோன்றுவதால், உலக மொழிகளெல்லாம் மக்கள் மொழிகளே. இம் மண்ணுலகில் எங்கேனும் தேவரின்மையால், தேவமொழியுமில்லை. பிராமணன் நிலத்தேவன் என்பது எங்ஙனம் முழுப் பொய்யோ, அங்ஙனமே அவன் முன்னோர் வாயினின்று வந்த மொழியும் தேவ மொழியென்பது முழுப் பொய்யே. |
| மொழியென்பது ஒலித் தொகுதியே. ஒலிகளெல்லாந் தோன்றி மறையுந் தன்மையன. நீர்மேலெழுத்துக் கண்ணிற்குத் தோன்றி மறைவது போன்றே, ஒலியும் செவிக்குத் தோன்றி மறையும். நாடாப் பதிவானிற் பதிந்த வொலியும் தோன்றி மறைவதே. |
| ஏட்டிலுங் கல்லிலும் எழுதும் வரிவடிவும். சில பலநாள் நிலைத் திருப்பினும், படிப்பாரும் விளக்குவாருமின்றிப் பயன்படுவது மில்லை; தானாக எங்கும் இயங்குவதுமில்லை. ஆதலால், வேதங்கள் பூசித்துப் பூட்டிட்டது மறைக்காடு (வேதாரணியம்) என்பது ஆமை மயிர்க்கயிற்றால் கொம்புக் குதிரையைக் கட்டினது போன்றதே. மரையென்பது மான்வகை. அது மிகுந்த மரைக்காடு என்பதே, மறைக்காடு எனத் திரிக்கப்பட்டுக் கதையுங் கட்டப்பட்டது. |
| இனி, வேதம் இறைவன்போல் தொடக்கமிலி. அதன் மந்திரங்கள், முனிவராற் காணப்பட்டனவேயன்றி இயற்றப்பட்டன வல்ல; என்பதோ வெனின், ஈடிணையற்ற மாபெரும் பொய்யாகும். திருவள்ளுவமாலையில் வெள்ளி வீதியார் என்னும் பெயரிலுள்ள பாவில், வேதத்தைச் "செய்யா மொழி" என்றது, ஆரிய அடிமைத் தமிழரின் பேதைமையையும் மூட நம்பிக்கையையுமே காட்டும். |
| உலகில் தேவமொழியென்று சொல்லத்தக்க உயர்மொழி ஒன்றுண் டெனின், அது குமரி நாட்டுக் குமரித் தமிழே. |
| 5. திருவள்ளுவர் பெருமை |
| (1) தமிழர் மீட்பர் |
| பிராமணர் தமிழரை நால்வரணக் கூண்டுகட்குள் அடைத்தபின், அவர் என்றும் அவற்றினின்று வெளியேறா திருத்தற்பொருட்டு, |