| நால்வரணப் பூத வடிவங்களை, மதுரைக் கோட்டை மதில் வாயில் நான்கிலும், நாடக வரங்குகளிலும், கல்லறைகளிலும், எழுதி வைத்தனர். |
| | "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்" | (புறம். 183) |
| | "பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்" | (சிலப். 22: 109) |
| | "நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ............................................................ ஆதிப்பூதத் ததிபதிக் கடவுளும் ................................................................. பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ................................................................... அரைச பூதத் தருந்திறற் கடவுளும் செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் ................................................................... விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும் கருவிளை புரையும் மேனியன்................ மண்ணுறு திருமணி புரையு மேனியன் ................................................................. கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றி .................................................................. நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயர" | (சிலப். 22: 16-108) |
| | "தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப் பூதரை யெழுதி மேனிலை வைத்து" | (சிலப். 3: 106-7) |
| இதன் (அடியார்க்கு நல்லார்) உரை: |
| "அந்தணர் அரசர் வணிகர் சூத்திரரென்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதரையும் எழுதி, மேனிலத்தே யாவரும் புகழ்ந்து வணங்கவைத் தென்க." |
| | "என்னை? கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங் காடுநர்க் கியற்று மரங்கி னெற்றிமிசை வழுவில் பூத நான்கும் முறைப்பட எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே" | |
| என்றாராகலின். |
| | "அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் | |