| பிராமணன் வேதம் ஓதுவதனாலேயே மற்ற மூவருணத்தாரும் வாழ்கின்றனர் என்றதை மறுத்து, |
| | "உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து." | (குறள். 1032) |
| | "இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை" | (குறள். 41) |
| | "துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு யில்வாழ்வா னென்பான் றுணை." | (குறள். 42) |
| என்றும், |
| பிராமணன் வேள்வி செய்வதனாலேயே உலகில் மழை பெய்கின்ற தென்றதை மறுத்து, |
| | "இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு." | (குறள். 545) |
| | "முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி யொல்லாது வானம் பெயல். | (குறள். 559) |
| என்றும், திருக்குறளியற்றித் தமிழரை மீட்டார். |
| 2. வாழ்க்கை வழிகாட்டியார். |
| | "கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் றாளை வணங்காத் தலை." | (குறள். 9) |
| | "எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு." | (குறள். 392) |
| | "கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை." | (குறள். 414) |
| | "மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட் பேறு." | (குறள். 60) |
| | "மனையாளை யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று." | (குறள். 904) |
| | "இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு." | (குறள். 920) |
| | "பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண்." | (குறள். 146) |
| | "தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல்." | (குறள். 67) |
| | "மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்." | (குறள். 70) |