பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டக் கால்கோல் விழா வாழ்த்துரைவாழ்த்துரை விளக்கம்171

  "ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு."

(குறள். 760)

  "முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்."

(குறள். 616)

  "பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து
மிருடீர வெண்ணிச் செயல்."

(குறள். 675)

  "எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு."

(குறள். 467)

  "அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கட் படும்."

(குறள். 625)

  "ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்."

(குறள். 33)

  "ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு."

(குறள். 642)

  "தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்."

(குறள். 293)

  "உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்."

(குறள். 282)

  "இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."

(குறள். 314)

  "செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது."

(குறள். 101)

  "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்."

(குறள். 460)

  "ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்."

(குறள். 792)

  "அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

(குறள். 523)

  "அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

(குறள். 443)

  "மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.

(குறள். 942)

  "தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று."

(குறள். 236)