| 6. தெய்வப் புலவர் |
| திருவள்ளுவ மாலையில், நக்கீரர் பெயரிலுள்ள |
| | "தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும்-ஏனோகுக் கூழி னுரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்றும் மற்று." |
| என்னும் பாவும், மாமூலனார் பெயரிலுள்ள |
| | "அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொற் கொள்ளார் அறிவுடை யார்." | |
| என்னும் பாவும், கல்லாடர் பெயரிலுள்ள |
| | "ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார்-நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி." | |
| என்னும் பாவும், உருத்திரசன்ம கண்ணர் பெயரிலுள்ள |
| | "மணற்கிளைக்க நீரூறும் மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால்-பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க் காய்தொறும் ஊறும் அறிவு." | |
| என்னும் பாவும், மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார் பெயரிலுள்ள |
| | "புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல் சிலவர் புலவரெனச் செப்பல்-நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்கிருள்மா லைக்கும் பெயர்." | |
| என்னும் பாவும், திருவள்ளுவரின் தெய்வப் புலமையை ஒருவாறுணர்த்தும். |
| 7. முதற் பாவலர் |
| | "காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் பேசும் உலாவிற் பெதும்பைபுலி-ஆசு வலவர்க்கும் வண்ணம் புலியாமற் றெல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி." | |
| என்பது, ஒளவையார் ஒருவர் பெயரிலுள்ள பழம்பாட்டு. |
| பாவிற்குச் சிறந்த வெண்பாலிலுங் குறுகிய வகையான குறட்பாவில், திருவள்ளுவர் விரிந்த பொருளை யமைத்திருப்பது, அவரின் முதற்பா வன்மையைச் சிறப்பக் காட்டும். |