| வள்ளுவர் கோட்டக் கால்கோல் விழா வாழ்த்துரைவாழ்த்துரை விளக்கம் | 179 |
| திருவள்ளுவர் வகுத்த சிறந்த முறையைக் கையாளாது, ஆண்டுதோறும் அவர் பெருமையையோ அவர் நூற் சிறப்பையோ அவையோர் மகிழ அடுக்கிக் கூறிப் பயனில்லை. | | | "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." | (குறள். 423) | | என்பது ஓர் அறிவுத் துணுக்கு. | | வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் இல்லாத பண்டைக் காலத்தில், தென்னாடு வந்த ஆரியரான பிராமணர், தம்மை நிலத்தேவரென்று மூவேந்தரையும் ஏமாற்றினர். அவ் வேந்தரும் அதை நம்பி அவர் ஏவியதை இயற்றினர். அதைப் பொதுமக்களும் பின்பற்றினர். | | ஆயின், ஆங்கிலராட்சியும் அறிவியற் கல்வியும் கண் திறந்த பின்னும், நயன்மைக் கட்சித் தலைவர் கால் நூற்றாண்டு இன முன்னேற்றத் தொண்டு செய்தபின்னும், மறைமலையடிகள் தனித் தமிழியக்கங் கண்ட பின்னும், ஆரிய மொழியாராய்ச்சி யுண்மைகள் வெளிப்பட்டபின்னும், தி.மு.க. ஆட்சியும் தவத்திருக் குன்றக்குடியடிகளின் அருள்நெறித் திருக்கூட்டமும் ஏற்பட்டபின்னும், மருத்துவமும் ஏரணமும் வரலாறும் ஞாலநூலும் கற்றபின்னும், பிறநாடு சென்று மீண்டபின்னும், பிராமணரை நிலத்தேவரென்று கொள்ளாவிடினும் பிறப்பா லுயர்ந்தவரென்று நம்பியும், மறுமையிற் பிராமணக் குலத்திற் பிறக்கவேண்டுமென்று விரும்பியும், பகுத்தறிவிற்குச் சிறிதும் ஒவ்வாத பிராமணர் நடிப்பை எண்ணிப்பாராதும், மானமழிந்து மதிகெட்டுத் தாம் மக்கட்டன்மை யிழப்பதுடன், தம் முன்னோர்க்கு இழிவும் பின்னோர்க்கு அழிவுந் தேடும் தமிழர், மக்கட் பெருக்கமும் உணவுத் தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில், இருப்பதினும் இல்லாமையே மேலாம். | | தமிழன் எத்துணை நாகரிகமுங் கல்வியுந் துப்புரவும் ஒழுக்கமும் தோற்றப் பொலிவும் செல்வமும் அதிகாரமும் உயர்வும் உடையவனாயினும், பிராமணனொடு தன் இல்லத்திலோ அவனில்லத்திலோ உண்டாட்டிற் கலந்து கொள்ள முற்றுந் தகுதியற்றவன்போல் இருக்கின்றான். | | பிராமணன் உண்டிச் சாலையில் அல்லது ஒரு பொதுவிடத்தில், பிராமணருந் தமிழரும் கூடி யுண்ணலாம்; ஆயின், பிராமணன் இல்லத்தில் அங்ஙனம் உண்பதில்லை. | | தமிழருள் உயர்ந்த மரக்கறி வெள்ளாளன் இல்லத்தில், பொற்கலத்தில் நீர் அல்லது பால் அன்பளிப்பாகக் கொடுப்பினும் பிராமணன் குடியான். ஆயின், அவரினும் மிகத் தாழ்வாகக் கருதப்படும் இடைச்சி, அல்லது தன்னை இடைச்சியென்று சொல்லிக் கொள்பவள், தன் பழைய மட்கலத்தில் தன் வீட்டுத் தண்ணீரைக் கலந்து கொடுக்கும் தயிரையோ, வானமுதம் போற் | | |
|
|