பக்கம் எண் :

187ஆய்வு

என்று கூறிய சூத்திரத்திற்கு இளம்பூரணர் பின்வருமாறு உரையும் விளக்கமும்
கூறுகின்றார்:

     “எவ்வகைப்பட்ட பொருளாயினும், தன்னுழை உள்ளது அல்லதனை
இல்லை எனலுறுமே எனின், அவன் கூறிய பொருளல்லாத பிறிது பொருள்
கூறி இல்லை என்க.”

     “தன்னுழை உள்ளதன் உண்மை கூறி, இல்லை என்க என்பது
கருத்து. இதன் கருத்து அவன் வினாவப்பட்ட பொருட்கு இனமாய பிறிது
பொருளே கூறுக
என்பது.”*

     பின்வரும் நன்னூல் சூத்திரத்தில் இளம்பூரணர் கருத்து இடம்
பெற்றிருப்பதை அறியலாம்.

     தம்பால் இல்லது இல்லெனின் இனனாய்
     உள்ளது கூறி மாற்றியும், உள்ளது
     சுட்டியும் உரைப்பர் சொற்சுருந் குதற்கே.
                                               (நன்-406)

இளம்பூரணருக்கு முன்

    தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவர் இளம்பூரணர்
என்று போற்றப்படுகின்றார். ஆனால், அவர் தமக்கு முன் வேறு சில
உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்ததைப் பலப் பல இடங்களில் சுட்டிக்
காட்டுகின்றார். பிறர் கருத்தை மறுக்காமல், உள்ளதை உள்ளவாறே சுட்டி
மேலே செல்லுகின்றார். ஏனைய அதிகாரங்களைவிட, சொல்லதிகாரத்தில்
பல இடங்களில், இவர் பிறர் உரைகளை மிகுதியாகக் குறிப்பிடுகின்றார்.

     என்ப ஒரு சாரர் ஆசிரியர் (44, 57), ஒருவன் சொல்லுவது (4, 18, 25,
38, 44), ஒரு திறந்தார் கூறுப (1, 56, 58) என்பாரும் உளர் (30, 33), என்பது
ஒரு கருத்து (66, 447), ஒரு திறத்தார் ஆசிரியர்


   * புல்லியோர் பண்டம் கொள்வார்
         வினவிய பொருள்தம் பக்கல்
    இல்லெனில் இனமாய் உள்ள
         பொருள் உரைத்து எதிர்மறுத்தும்
    அல்லதுஅப் பொருள்உண்டு என்னின்
         விலைசுட்டி அறுந்து நேர்ந்தும்
    சொல்லிலும் லாபம் கொள்வார்
         தொன்மர பிருக்கை சொல்வோம்
                          -திருவிளையாடற் புராணம்.

என்ற பாடலில் பரஞ்சோதியார் இளம்பூரணர் கருத்தை மேற்கொண்டுள்ளார்.