தான் இந்தச் சமயச் சார்பற்ற தன்மை மறைந்தது . பல்லவப் பேரரசு ,ஒரு காலத்தில் சைவத்திற்கு எதிராகச் சமணச்சார்பு கொண்டதாக இருந்தது. பின்னர், சமணத்தைக் கைவிட்டு, சைவ சமயச் சார்புடையதாக மாறியது. பல்லவப் பேரரசேயன்றி , திருஞானசம்பந்தர் -திருநாவுக்கரசர் காலத்தில் பாண்டியர் பேரரசும் முதலில் சைவத்தைச் சார்ந்திருந்தது . பின்னர், சமணச் சார்புடையதாகி, மீண்டும் சைவத்தைத் தழுவியதாக அறிகின்றோம். கலப்புத் தமிழ்! தமிழ் வேந்தர்கள், சமயச் சார்பற்ற முறையில் -'தமிழர்' என்ற இன உணர்வோடு - ஆட்சிபுரிந்த காலம்வரை தமிழ் மொழி சிறப்புடனும் செல்வாக்குடனும் உரிமை வாழ்வு நடத்தியது. இதற்கு மாறாக , தமிழக அரசர்கள் சமயச் சார்புடையவர்களான பின்னர் தமிழ் மொழியின் வாழ்வு தேய்பிறையாகி, தமிழகத்திலே சம்ஸ் கிருதத்தின் செல்வாக்கு வரம்பு மீறி வளர்ந்தது . சங்ககால மன்னர்கள் - பாரி, காரி, ஓரி, ஆய், பேகன், செழியன் , வளவன் எனப் பெயர் பெற்றிருந்தனர் . அவ்வளவும் தூய தமிழ்ப்பெயர்கள் ! ஆனால் ,தமிழ்மொழி உரிமை இழக்கத் தொடங்கிய பின்னர் , சோழ மன்னர்களின் பெயர்கள் இராசராசன் ,இராஜேந்திரன், குலோத்ங்கன் எனவும் ;பாண்டிய வேந்தர்களின் பெயர்கள் அரிமர்த்தனன், வரகுணன் எனவும் வட மொழிப் பெயர்களாக மாறின. சேர மன்னர்களோ, தமிழ் மொழிக்கே அயலாராயினர் . சேர நாட்டிலே சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கு வளர்ந்ததால், அது 'கேரளம்' ஆனது. மக்களின் பெயர்களும் இந்த 'விதி'க்கு விலக்காக இல்லை. தமிழ் மூவேந்தர் காலத்திலேயே தமிழின் தனித்தன்மை மறைந்து, அரசியலில் அதன் செல்வாக்குக் குறைந்து வந்த தென்றால் , ஆந்திரரும் மராத்தியரும் மொகலாயரும் தமிழகத்திலே அரசியல் ஆதிக்கம் பெற்ற காலத்தில் இன்னும் மோசமானது. ஆங்கிலேயர் காலத்திலோ, நமது தாய் மொழியின் வாழ்வை இருள் கவ்விவிட்டது. அன்னிய மொழியினர் - இனத்தினர் தமிழகத்தின் மீது ஆதிக்கம் பெற்றிருந்த காலங்களிலேயும் புதுப்புது இலக்கியங்கள் தமிழில் தோன்றினவென்றாலும், அவையனைத்தும் தெய்வங்கள் மீது துதிபாடும் பிரபந்தங்கள் - ஸ்தல புராணங்கள் எனப்படும் சமய இலக்கியங்களே யன்றி , சமூக இலக்கியங்களல்ல . சமூக இலக்கியங்களைப் படைப்பது பாவம் என்றகருத்துக் கூட நிலவியது. சங்க இலக்கிய ங்களைப் படிப்போர் நாத்திகராகி விடுவர் என்று கூடப் |