பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 101

     "இந்தக்  கழகமானது  சென்ற  சில வருஷங்களாக மௌனமாக வேலை
செய்துகொண்டிருந்தது  என்று  'ஹிந்து'  பத்திரிகையின்  ஒரு   சிறு  தலை
யங்கத்தில் எழுதப்பட்டிருந்தது. என்னதான்  மௌனமாக வேலை செய்தாலும்,
தலைமுறை  தலைமுறையாகத்  தமிழ்ப்  பாஷையை ஆ தரித்துக் காப்பாற்றி
வருகின்ற தமிழ்ப்பண்டிதர்களும் அறியாமலா நடந்திருக்கின்றது?

      "நிற்க இவ்விஷயம்  ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆங்கில  பாஷையில்
ஆங்கிலமறிந்த  அறிஞர்களின்  பொருட்டு   மட்டும்  பிரசுரிக்கப்  பட்டிருக்
கின்றமை  அதியாச்சர்யமாகயிருக்கின்றது.  தமிழ்ப் பாஷா  நூலாசிரியர்களின்
ஜீவித சரித்திரங்களையும்நூல்களையும் அறிந்தவர்கள் தமிழ்ப்பாஷை மாத்திரம்
தெரிந்தோர்களில் எவர் இருக்கின்றனர்? என்று மேற்படி கழகம் கருதிவிட்டது
போலும்!

      "தங்கப்  பதக்கங்கள்  பெறும்  பொருட்டு  எழுதப்படும்  வியாசங்கள்
இன்னாரால்  அல்லது  இன்ன  புலவர் கூட்டத்தால் மதிப்பிடப் பெறுமென்று
மேற்படி   கழகத்தின்  அறிக்கைப்  பத்திரத்தில்  கூறப்படவில்லை. ஆனால்,
"ஹிந்து"  எழுதிய   தலையங்கத்தில்  தக்க  வித்வான்களால்    வியாசங்கள்
பரிசோதிக்கப்படுமென்று  எழுதப்பட்டிருந்தது. அறிக்கைப்  பத்திரத்திலில்லாத
விஷயம்  " ஹிந்து " வுக்குத்  தெரிந்திருக்கிறதை  யோசித்தால், "ஹிந்து" வும்
அக்கழகத்திற்   சேர்ந்ததேயென்று  தோன்றுகிறது.  எப்படியாயினும் மேற்படி
கழகம் தமிழ்ப்பாஷையை உன்னத நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்பதே
நமது கோரிக்கை.

     "ஆனால்,   மேற்படி  கழகத்தின்  அங்கத்தினர்கள்  இவை  யெல்லா
வற்றையும்  செய்வதற்கு  முன்பாகத்  தங்களுடைய  சொந்த  கிரகங்களிலும்
தங்களுடைய  தமிழ்ச்  சிநேகிதர்களுடன்  செய்யும்  சாதாரணமான  நித்திய
சம்பாஷணைகளிலும் தமிழ்ப் பாஷையைத் தவிர,அந்நிய பாஷைச் சொற்களை
ஒருபொழுதும்  மறந்தும்   உபயோகிப்பதில்லையென்று  பிரதிக்ஞை  செய்து
கொள்வார்களாயின் ,  இதுவே   தமிழ் பாஷையினிடத்து   இவர்களுக்குள்ள
அபிமானத்துக்கு  ஒரு   அறிகுறியாகும்.  'பெரிய' மனிதர்கள்  வினைசெய்ய
வேண்டுமே யொழிய, சிறிய குழந்தைகளைப் போல விளையாடலாகாது."1


1. 'ஞானபாநு'மே1915.