பக்கம் எண் :

102விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

    மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வத்தலகுண்டில் பிறந்தவரான சிவா,தமக்கு
வாழ்க்கைப்பட்ட  மனைவி  மீனாட்சியம்மாளைத்  துறந்து, ஈன்று   வளர்த்த
அன்னையையும் மறந்து தேச விடுதலைப் போரிலே வெறிபிடித்து அலைந்தார்.
அந்த நிலையிலும் தமிழ் மொழியைத் துறக்காமல்-மறக்காமல், அதன் வளர்ச்சி
கருதித்   தொண்டு    புரிந்தாரென்றால், அவரை  என்சொல்லிப்  புகழ்வது!
ஆங்கிலப் பேரரசின் ஆதிக்கம் வேறு; ஆங்கில மொழியின் ஆதிக்கம் வேறு
-என்று அவர் எண்ணவில்லை. அவர், ஆங்கில அரசோடு சேர்த்து, ஆங்கில
மொழியின்   ஆதிக்கத்தையும்   வெளியேற்ற   விரும்பினார் - துடித்தார் -
தொண்டாற்றினார். வாழ்க, சிவாவின் புகழ்!

செந்தமிழ் வளர்த்த சிதம்பரனார்

     திலகர் சகாப்தத்திலே தமிழகத்தின் தளபதியாக-தென்னாட்டுத் திலகராக
விளங்கிய பெருமை  கப்பலோட்டிய  தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கே  உரிமை
என்பதனை முன்பே அறிந்தோம். அவருக்கும்  திலகருக்குமிருந்த தொடர்பை
வருணிக்கையில்,  "திலக மகரிஷியின் கதைபாடும் போது, சிதம்பரம் பிள்ளை
வந்து சுதிபோடும்" என்று பாடியுள்ளார் நாமக்கல்  கவிஞர்.  வ.உ.சி.பெரியார்,
தம்  தாய்  மொழிக்கு   ஆற்றியுள்ள  தொண்டினைத்  தமிழர்  மறந்தாலும்
உயிருள்ள தமிழ் மறவாது.

     திலகர்  சகாப்தத்திலே  தமிழகத்தில் வாழ்ந்த  பெருந்தலைவர்களிலே
தமிழ்மொழிக்குத்    தொண்டாற்றியவர்களின்    பெயர்களைப்   பட்டியல்
தொகுத்தால், வ.உ.சிதம்பரனார் பெயர் அதிலே சிறப்பிடம் பெறும்.

     வ.உ.சிதம்பரனார், முப்பதாவது வயதிலே  இரண்டு ஆயுள் தண்டனை
பெற்றார். பின்னர், அப்பீலில் 6  ஆண்டுகளாகக் குறைக்கப்  பட்டது. அவர்
தமது  தண்டனைக்  காலத்தைக்  கோயமுத்தூர்,  கண்ணனூர்  ( கேரளச் )
சிறைகளில் கழித்தார். தமிழே சிறைப்பட்டது என்று சொல்லுமளவுக்கு அவர்
தம் தாய் மொழியிலே புலமை பெற்றிருந்தார்.

     சிதம்பரனார்,      தமிழிடத்துப்      பற்றுடைய      குடும்பத்திலே
பிறந்தார்.  அவருடைய தந்தையாரும்   தமையனாரும்   வழக்கறிஞர்களாவர். சிதம்பரனாரும்    உயர்தரக்கல்வி    கற்று,  சட்டம்  பயின்று  வழக்கறிஞர்
தொழில்   புரிந்தார்.   ஆனால்,   ஆங்கிலத்திற்கு   அடிமையாகாமல், தம்