பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 105

'கொள்ளைக்காரன்' என்றே வருணித்தெழுதினர். நம்மவர்களிலே படித்தவர்கள்
அதனை  அப்படியே  நம்பினர். தேசபக்த  மாவீரரான  சிதம்பரனார், ஏகாதி
பத்திய  ஏஜண்டுகள் எழுதியதனை  ஏற்கவில்லை . அதற்கு  மாறாக, அவரது
எழுதுகோல்   கட்டபொம்மனை   விடுதலை   கோரிப்  போராடிய  சுதந்தர
வீரனாகவே வருணித்தது. தான்  பிறந்த ஒட்டப்பிடாரத்தைக் குறிப்பிடுமிடத்து,

          அருந்திறன் நாட்டி ஆங்கில ரோடமர்
         பொருந்திய கட்டபொம்மு நாயகன்,
         பாஞ்சால மன்னன், பண்புடன் அமர்ந்த
         பாஞ்சால நகர்மதில் பக்கத் துள்ளது...1

     என்கின்றார் வ.உ.சி. சிறைவாசத்தின்போது சகக்கைதிகள் கட்டபொம்மன்
கதை பாடிய செய்தியையும் கூறுகின்றனர்.

         சதுர மாகச் சர்க்கா ரொடுபல
         சண்டைகள் புரிந்து தன்திறம் நாட்டி
         எண்டிசையும் புகழ் இயம்பிட நிற்கும்
         நமது பாஞ்சால நாயகன் சரிதமும்
         எமதுளம் களித்திட இன்பொடு கேட்டேம்2

     வ.உ.சிதம்பரனார், தமது சுய சரிதை3யை முழுஅளவில் அகவற் பாவால்
இயற்றி   வழங்கியுள்ளார். அதன்  பெரும்  பகுதியைச்   சிறைவாழ்க்கையின்
போதே எழுதினார்.
 

     வ.உ.சிதம்பரனாரின் " எனது தனிப்பாடற்றிரட்டு " என்ற கவிதை நூலும்,
' வ.உ.சி.கண்ட பாரதி '  என்ற  உரைநடை  நூலும்  வ.உ.சி.  சுயசரிதையின்
அங்கங்களாகவே மதிக்கப் படவேண்டும்.

சிறையா, கல்லூரியா?

     " வ.உ.சி. சுயசரிதை " என்ற நூல் அவரது சொந்தச் சரிதைமட்டுமன்று
திலகர்  சகாப்தத்தின் முற்பாதியில் தமிழகத்தில் நடந்த விடுதலைப் போரின்
வரலாறுமாகும். அந்த வகையில், அதனை 'அரசியல் தஸ்தாவேஜு ' என்றும்
கருதலாம். கவிதை  வடிவம்  பெற்றுள்ளதால் தமிழ்  இலக்கியக் களஞ்சியத்
திலேயும் சேர்க்கப்படத் தக்கதாகும்.


1. வ.உ.சி.சுயசரிதை; பக்.2.
2. வ.உ.சி.சயசுரிதை ; பக்.9.
3. இந்நூல் வ.உ.சி.,சுப்பிரமணியம் அவர்களால் 1946ல்
  வெளியிடப்பட்டது.