துப்பால் ஒன்றை மட்டுமே 1935ல் வெளியிட்டார். மற்றிரு பால்களையும் வெளியிடுமுன் 1936ல் இயற்கையெய்தினார். அவர் மறைந்தபின் அவை வெளியிடப்படவில்லை யென்பதோடு, அவற்றின் கையெழுத்துப் பிரதிகளும் தொலைக்கப்பட்டு விட்டனவாம். சிதம்பரனார் , இராமகிருஷ்ண பரமஹம்சர் வழியில் நின்றொழுகிய வேதாந்தி யென்பதனை முன்பே அறிந்தோம். கல்கத்தாவிலுள்ள இராம கிருஷ்ண மடத்துத் துறவிகளோடு தொடர்பு கொண்டிருந்தார். அந்நாளில் இராமகிருஷ்ணர் மடம் தேசபக்தியையும் சுதேசியத்தையும் பரப்புவதிலே பேரார்வம் காட்டி வந்தது . கல்கத்தா பேலூர் மடத்தின் பிரதம ஞானியாக விளங்கிய தவத்திரு இராமகிருஷ்ணானந்தர் என்ற ஞானியால் தூண்டப்பட்டே சுதேசிக் கிளர்ச்சியில் ஈடுபட்டார் வ.உ.சி. சிதம்பரனார் , தம் கருத்தைக் கவர்ந்த வேதாந்த நெறிக்கும் தமிழகத்திற்கேவுரிய சைவ சித்தாந்தத்திற்கு முள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்ள விரும்பி, மெய்கண்டார் இயற்றிய சைவ சித்தாந்தச் செல்வமான சிவஞான போதம் என்ற சாத்திரத்தை ஆழ்ந்து படித்தார் . அதன் செய்யுட்களுக்குத் தாம்கொண்ட பொருளைப் பிறர்க்கும் உணர்த்த அந்நூலுக்கு எளிய நடையில் உரை இயற்றினார். சைவ மரபுப் படித் தீக்ஷை பெறாதவர் என்று காரணங்காட்டி, சிதம்பரனாரின் உரையை ஏற்கச் சைவர்கள் மறுத்தனர். அவர்கள் மறுப்புக்கஞ்சாது, தமது உரையைத் தக்கார் பலர்முன் அரங்கேற்றினார். சிவஞான போதத்திற்கு வழிநூலாகச் சிவஞான சித்தியார் இயற்றிய சிவஞான முனிவர், தன் மதங் கூறுவதோடு அமையாது, பிறர்மதங் கண்டித் தலையும் கடைப்பிடித்தார். அந்நாள் தொடங்கி, அது ஒரு மரபாகி விட்டது. ஆனால், தேசிய ஒருமைப்பாட்டினை விரும்பும் சிதம்பரனார் அந்த மரபைக் கடைப்பிடிக்க மறுத்து விட்டார். "இவ்வுரையில் ஏனைய உரைகளிற் காணப்படும் பல மதக் கோட்பாடுகளும், அவற்றின் கண்டனங்களும் காணப்படா. அவை காணப்படாமைக்குக் காரணம் மக்கள் பல வேறுபெயர்க ளோடும், வடிவுகளோடும் காணப்படினும் அவர்களெல்லாம் மக்கட் சாதியினரே யாவது போல, மதங்கள் பல்வேறு பெயர்க |