| டாக்டர். ம.பொ.சிவஞானம் | 109 |
ளோடும் கொள்கைகளோடும் காணப்படினும் அவைகளெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரே இறைவனைப் பற்றியே பேசுகின்றன என்று யான் கருதுகின்றமையே அன்றியும், மதவேற்றுமையைக் காண்பவர்களும், பேசுபவர்களும் "யான்" , "எனது" என்னும் மதவெறிபிடித்த மாக்களே யென்றும், நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலைமையில் மத வேற்றுமைகளையோ,சாதி வேற்றுமைகளையோ, வேறு வேற்றுமைகளையோ காண்பவர்களும் பேசுபவர்களும் தேசத்திற்குத் தீங்கிழைப்பவர்களேயென்றும் யான் கருதுகின்றேன். அதனாலும், இவ்வுரையில் யான் பல மதக் கோட்பாடுகளையும் அவற்றின் பொய்யான உயர்வு தாழ்வுகளையும் பற்றி ஒன்றும் பேசவில்லை."1 விடுதலைப் போராட்ட காலத்திலே , தேச விடுதலைக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் கேடு பயக்கத்தக்க எதையும் தேசத்தலைவர்கள் ஏற்ற தில்லை ; எதிர்க்கவும் செய்தனர். அந்த உணர் பண்பினை இலக்கியத் துறையிலேயும் கடைப்பிடித்தார் வ.உ.சி. அதனாற்றான், தாம் எழுதிய சிவ ஞான போத உரையிலே பிற மதக்கண்டனங் கூற மறுத்தார். மற்றும், ஆத்திக- நாத்திக வாதத்தையும் அவர் வெறுத்தார். அதுகூட நாட்டு மக்களைப் பிளவு படுத்தி விடுமென்று அஞ்சினார். "இவ்வுலகத்தின்கண் தோன்றி நிலவுகின்ற சமயங்கள் பல. அவற்றுள், கடவுள் இல்லையென்று சொல்லும் சமயம் ஒன்று. அதனை நாஸ்திக சமயம் என்பர் ஆன்றோர் . மற்றைய சமயங்களெல்லாம் கடவுள் உண்டென்று சொல்பவைகளே. அவற்றை ஆஸ்திக சமயம் என்பர். ஆன்றோர். நாஸ்திக சமயத்தினர் அண்டங்களின் அமைப்பும் , அண்டங்கள் ஒன்றையொன்று ஒழுங்காகச் சுற்றி வருதலும், ஒவ்வோர் அண்டத்திலும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஒழுங்காக நிகழ்ந்து வருதலும் இயற்கையின் சக்தியால் என்று சொல்லுகின்றனர். ஆஸ்திக சமயத்தினர் களோ அவைகளெல்லாம் ஒழுங்காக நிகழ்ந்து வருதல் கடவுள் சக்தியால் என்று சொல்லுகின்றனர். நாஸ்திகரது இயற்கையைத்தான் ஆஸ்திகர் கடவுளென்று கூறுகின்றன 1. சிவஞான போதம் பக்.31, வ.உ.சி.உரை-முன்னுரை |
|
|
|