பக்கம் எண் :

110விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

ரென்று    ஆஸ்திகரும்    கொள்வரேல்,    இவ்விரு   சமயங்களுள்ளும்
வேற்றுமையில்லை."1

     இது, ஆத்திக-நாத்திகரிடையே ஒற்றுமையை உருவாக்க வ.உ.சி. செய்த
உபதேசமாகும்.

பூசலை வெறுத்த புனிதர்

      மொழிப்பற்று  காரணமாகவும்   மக்கள்  பிளவு  படுவதை  வ.உ.சி.
வெறுத்தார் - குறிப்பாக, தென்மொழி  வடமொழிப் பூசலை  அவர் விரும்ப
வில்லை. அத்தகைய  பூசலுக்குத் தூண்டும் ஆராய்ச்சிகளிலிருந்தும் ஒதுங்கி
நிற்கவே அவர் விரும்பினார்.மெய்கண்டார் தமிழில் தந்த சிவஞான போதம்
வடமொழியிலிருந்து  வந்ததேயென்று வடமொழிப்பற்றுடையோரும், தமிழில்
தோன்றிய  மூல நூலென்று  தமிழ்ப்  பற்றுடையோரும்  வாதிட்டனர். இது,
மொழிப்பூசலை வளர்த்தது. இதனை வெறுத்தார் வ.உ.சிதம்பரனார்.

      "தமிழ்ச்சிவஞான போதம் வடமொழிச் சிவஞான போதத்தின் மொழி
பெயர்ப்பெனச்  சிலரும்,  வடமொழிச்  சிவஞானபோதம்  தமிழ்ச் சிவஞான
போதத்தின்  மொழிபெயர்ப்பென  வேறு  சிலரும் கூறி  வருகின்றனர்.அது
சம்பந்தமாக யான் இவ்வுரையில் ஒரு முடிவும் கட்ட முற்படவில்லை."2

      பதிணென்   கீழ்க்கணக்கு  நூல்களுள்  ஒன்றான  "இன்னிலை' க்கு
விருத்தியுரை  இயற்றி   வெளியிட்டார்.  தொல்காப்பியத்தை  இளம்பூரணர்
எழுதியுள்ள உரையுடன் பதிப்பித்தார்.

     சேலம்  அரசியல்  மாநாட்டிலே  தலைமை  தாங்கி தாம் நிகழ்த்திய
சொற்பொழிவினை " எனது அரசியல் பெருஞ்சொல்" என்னுந்  தலைப்பிட்டு
நூலாக்கினார்.

கருத்துப்போர்!

     பாரதியார்,    சிதம்பரனாரின்      உயிர்த்தோழர்.      இருவருமே
காங்கிரஸ்காரர்கள்.      காங்கிரசிலேயும்      தீவிரவாதக்     குழுவினர்.
சிதம்பரனார்  மீது  அரசநிந்தனை  வழக்கு    திருநெல்வேலி   செஷன்ஸ்


1. சிவஞான போதம் பக்.31, வ.உ.சி.உரை - முன்னுரை
2. சிவஞான போதம் வ.உ.சி.உரை - முன்னுரை