நீதிமன்றத்தில் நடைபெற்றபோது , அவருக்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ்
ஆட்சிக்கு எதிராகவும் பாரதியார் சாட்சியங் கூறினார். மற்றும், வ.உ.சிக்கும்
திருநெல்வேலிக் கலெக்டருக்கும் நடந்த வாக்குவாதத்தைக் கவிதைகளாக்கி,
தமது பெருமதிப்பிற்குரிய தோழர் சிதம்பரனாரின் புகழ் என்றென்றும்
நிலைக்கும்படிச் செய்தார். இப்படி , எல்லா வகையிலும் நெருங்கிய தோழமை கொண்டிருந்த
பாரதியாருடன், தமக்கிருந்த தமிழ்ப்பற்று காரணமாக ஒரே ஒரு முறை
கருத்துப்போர் நடத்தினார், வ.உ.சி.
சுப்பிரமணிய சிவம் நடத்திய "ஞானபாநு"வில், "தமிழில் எழுத்துக் குறை"
என்னுந் தலைப்பில் பாரதியார் ஒரு கட்டுரை எழுதினார். அதன் முக்கியப்
பகுதிகள் வருமாறு:
"ஸம்ஸ்கிருதம், ஹிந்தி, பெங்காளி, மஹாராஷ்ட்ரம், குஜராத்தி,
தெலுங்கு,கன்னடம், மலையாளம் முதலிய மற்ற பாரத பாஷைகளிலெல்லாம்
வர்க்க க-ச-ட-த-ப என்ற வல்லெழுத்துக்களில் ஒவ்வொன்றுக்கும் நான்கு
வேறுபாடுகள் இருக்கின்றன. திருஷ்டாந்தமாக,
வடசொல் பொருள்
(1) பரம் மேலானது
(2) பலம் (ப-ph) பயன்
(3) பலம்(ப-b) வலிமை
(4) பாரம் (ப-bh) சுமை
வெவ்வேறு எழுத்துக்களை முதலாகக் கொண்ட இந்த நான்கு
சொற்களையும் தமிழில் வழங்கி வருகின்றோம். ஆனால், "எல்ல செட்டி
லெக்க ஏக லெக்க " என்பது போல எல்லாவற்றிற்கும் ஒரே "ப" தான்
போடுகிறோம்.
"ஆனால், ஸம்ஸ்க்ருதச் சொற்களை ஸம்ஸ்க்ருத வழக்கப்படி நாம்
உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள்
வேண்டுவதில்லையென்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். சரி, நியாயமென்று
வைத்துக்கொள்வோம்.
"வெளிநாட்டு ஊர்களின் பெயர்களையும் மனிதர்களின் பெயர்
களையும் நாம் சரியானபடி சொல்லவேண்டுமா, அதுவும் வேண்டாமா?