பக்கம் எண் :

112விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     "கல்கத்தாவிலிருக்கும்போது ஸ்ரீமான் அரவிந்தகோஷ் (இவர் பெயரையும்
தமிழில்  சரியாக எழுத இடமில்லை. "Gosh"  என்பதை "Kosh" என்ற எழுத
நேரிடுகிறது! ) ஸ்ரீமான்அரவிந்தர்  தமிழ் கற்றுக்  கொள்ள   விரும்பினாராம்.
அங்கு  தென்னாட்டு  மனிதர்  ஒருவர்  இவருக்கு நமது அரிச்சுவடி முழுதும்
கற்றுக்கொடுத்தார். முதல் புஸ்தகமும் பாடம் நடந்தது. அப்படியிருக்கும்போது
ஒரு நாள்  தமிழ்நாட்டுப் பத்திரிகை யகப்பட்டது. அதில் "பீரேந்திர நாத தத்த
குப்தா வழக்கு"  என்று  மகுடமிட்டு  ஒரு வியாசம்  எழுதியிருந்தது. அதைப்
பார்த்துவிட்டு  அரவிந்தர்  தமது  தமிழ்  வாத்தியாரிடம் "இதென்ன?" என்று
சொன்னாராம்.  அரவிந்தர்   மயங்கிப்போய்  "எப்படி?  என்று   கேட்டார்.
வாத்தியார்  "Birendranath Datta Gupta"  என்று அச்சொல்லை பெங்காளி
ரூபத்திலே சொன்னார். "இங்கிலீஷ் தெரியாத கிராமத்துத் தமிழர் இச்சொல்லை
எப்படி வாசிப்பார்கள்?"என்று அரவிந்தர் கேட்டார். "நீர் வாசித்தது போலவே
Pirediranata  Tatta  Kuptar  (t-த)  என்றுதான்   வாசிப்பார்கள்"  என்று
வாத்தியார்  சொன்னாராம்.  இன்னும் அரவிந்தர் இந்தக் கதையைச் சொல்லிச்
சொல்லிச் சிரிக்கிறார்."

     "இங்கிலீஷ் அக்ஷரத்தில் ப்ரெஞ்ச், அரபி, பார்ஸி, ஸம்ஸ்க்ருதம் முதலிய
பாஷைகளின்  பதங்கள்  சிலவற்றை   எழுதுவதற்கு  ஸாதாரண   இங்கிலிஷ்
அரிச்சுவடி  இடங்கொடாததைக்  கருதிச்  சில  புதிய  குறிகள்   ஏற்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள் .  எல்லா    ஐரோப்பிய   பாஷைகளுமே    அந்நிய
பாஷைகளிலுள்ள  விசேஷ  உச்சரிப்புகளுக்கிணங்கும்படி  சில தனிக் குறிகள்
ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

      "நாமும்  அப்படியே   சில   விசேஷக்   குறிகள்   ஏற்பாடு  செய்து
கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்."1

     பாரதியாரின்  கருத்தினை  வ.உ.சி.  ஏற்கவில்லை;  எதிர்த்தார்.   தமது
எதிர்ப்பினை  ' ஞானபாநு ' விலேயே  வெளிவரச் செய்தார். அதன் முக்கியப்
பகுதிகள் வருமாறு:

     "சென்ற  சில   வருஷங்களாகச்   சில  அறிவாளிகள்    நம்  தமிழ்ப்
பாஷையில்      சில     எழுத்துக்கள்      குறைவாயிருக்கின்றனவென்றும்
அக்குறைவை    நிவிர்த்திக்கத்    தக்க   பிற   பாஷை எழுத்துக்களேனும்


1. 'ஞானபாநு' : சூலை, 1915